You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பாஷையூர் அந்­தோ­னியார் பெரு­விழா வியா­ழனன்று - பாதுகாப்புக்கருதி ஆலய முன்­றலில் தேர்ப்­ப­வனி

2019-06-11


யாழ்.மறை­ மா­வட்­டத்தின் பிர­சித்­தி­பெற்ற ஆல­யங்­களில் ஒன்­றான பாஷையூர் புனித அந்­தோ­னியார் ஆல­யத்தின் வரு­டாந்தப் பெரு­விழா நாளை மறு­தினம் வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.

பெரு­வி­ழாவின் முதல் தின­மான நாளை புதன்­கி­ழமை மாலை 5 மணிக்கு திருச்­செ­ப­மா­லை­யுடன் நற்­க­ருணைப் பெரு­விழா திருப்­பலி ஆரம்­ப­மாகும். யாழ்.மறை­மா­வட்ட குரு­மு­தல்வர் கலா­நிதி ஜெப­ரட்ணம் அடி­களார் இத்­தி­ருப்­ப­லியை தலை­மை­தாங்கி நிறை­வேற்­றுவார். 

நாளை மறு­தினம் வியா­ழக்­கி­ழமை பெரு­விழாத் திருப்­ப­லியின் முதல் திருப்­பலி காலை 5 மணிக்கு இடம்­பெறும். தொடர்ந்து பெரு­விழாத் திருப்­பலி காலை 6.15 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் பேர­ருட்­திரு ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை தலை­மையில் ஆரம்­ப­மாகும். 

இம்­முறை பாது­காப்புக் கார­ணங்­களை முன்­னிட்டு திருப்­ப­லியின் நிறைவில் ஆலய முன்­றலில் புனி­தரின் தேர்ப்­ப­வனி இடம்­பெற்று அந்­தோ­னி­யாரின் திருச்­சொரூப ஆசி­ருடன் விழா நிறை­வுறும்.

பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்­தினர் இணைந்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் பெரு­வி­ழா­வுக்கு வருவோர் கைப்பைகளையோ அல்லது சாதாரண பைகளையோ எடுத்து வர வேண்டாம் என ஆலயப் பங்குத்தந்தை ஜெரோ செல்வநாயகம் அடிகளார் தெரி வித்துள்ளார்.
(வட­ம­ராட்சி நிருபர்)