You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆயித்தியமலை சதா சகாய அன்னைத் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா 30திகதி ஆரம்பம் - ஒத்துழைப்பையும் வழங்குமாறு வேண்டுகோள்

2019-08-27


கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க திருத்தலமான மட்டக்களப்பு ஆயித்தியமலை சதா சகாய அன்னைத் திருத்தலத்தின் 65வது வருட திருவிழா எதிர்வரும் 30ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்திருத்தலத்தின் நவநாள் கிரியைகள் தினமும் இடம்பெற்று எதிர்வரும் நொவெம்பெர் மாதம் 8ம் திகதி காலை 7.15மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி Nஐhசெப் பொன்னையா தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவுபெறவுள்ளது.

தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகி நாளாந்த திருப்பலி ஆலய நிருவாகி அடிகளார்  அன்டணிடிலிமா தலைமையில் நடைபெற ஒப்புக் கொடுக்கப்படடுவதுடன் இத் திருத்தலத்தின் விசேட நிகழ்வான பாதையாத்திரை வழிபாடு செப்ரெம்பெர் மாதம் 7ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் காலை

5.15மணிக்கு நடைபெறும் திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவு பிரதேச வழியாகவும் அதேவேளை செங்கலடி நிக்கலஸ் ஆலயத்தினூடாகவும் ஆயித்தியமலை சென்றடையும் மாலை 6.00மணிக்கு திருப்புகழ் மாலை வழிபாடும் கலைநிகழ்வுகளும் இடம்பெறும்.

திருநாளை முன்னிட்டு விசேட அன்னதானமும் வழங்கப்படவுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த திருத்தல திருவிழாவிற்கு தேவையான போக்குவரத்து குடிநீர், பாதுகாப்பு, பொதுச் சுகாதார வசதிகளை வழங்குவது எனவும்  மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயித்தியமலை திருத்தலத்தின் திருவிழாவுக்கு தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்குமாறு சுற்றுலாத்துறை வனஜீவராசிகள் கிறிஸ்தவ சமய கலாசார அமைப்பின் ஆலோசனைக்கு இணங்க மாவட்ட அரசாங்க அதிபர் சகல திணைக்கள தலைவர்களுக்கும் முப்படையினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-ஏ.எச்.ஏ. ஹ{ஸைன்