You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




திரு­நீற்றுப் புதன் தவக்­கா­லத்தின் ஆரம்ப நாள்

March 01, 2017


யோவே 2: 12-18
ஆண்­டவர் கூறு­கிறார்: இப்­பொ­ழு­தா­வது உண்­ணா­நோன்­பி­ருந்து, அழுது புலம்­பிக்­கொண்டு, உங்கள் முழு இத­யத்­தோடும் திரும்பி வாருங்கள்'' என்­கிறார் ஆண்­டவர்.

இன்று (விபூ­திப்­புதன்) கிறிஸ்­த­வர்­க­ளா­கிய எமக்கு முக்­கி­ய­மான ஒரு நாளாகும்.

உலக மக்கள் எந்த இடத்தில் எப்­ப­டிப்­பட்ட பிரச்­சி­னை­களில் இருந்­தாலும் கிறிஸ்­துவின் உன்­ன­த­மான பாடு­க­ளையும் மர­ணத்­தையும் தியா­னித்து அந்த அனு­ப­வங்­க­ளிலே திருப்­ப­லியில் பங்­கு­கொள்ள வேண்­டிய நாளாகும். அது­மாத்­தி­ர­மல்ல ,'கைவி­டு­தலின்' கால­மாகும். எதை நாம் கைவிட வேண்டும், எதற்­காகக் கைவிட வேண்டும் எனும் கேள்வி எமக்குள் எழலாம்.

அன்­றாட வாழ்­விலே எமது சொல், செயல், சிந்­தனை ஆகி­ய­வற்றை மாத்­தி­ர­மல்ல  மது, மாது, நாடகம், படம், இணை­யத்தில் அதிக நேரம் செலவு செய்தல், சண்டை பிடித்தல் இப்­ப­டி­யான அனைத்­தையும் கைவிட்­டு­விட்டு ஆண்­டவர் பக்கம் எங்கள் கண்­களை நோக்­குவோம்.

“நீங்கள் உங்கள் உடை­களை கிழித்­துக்­கொள்ள வேண்டாம், இத­யத்தைக் கிழித்­துக்­கொண்டு உங்கள் கட­வு­ளா­கிய ஆண்­ட­வ­ரிடம் திரும்பி வாருங்கள்.

அவர் நீடிய பொறு­மை­யுள்­ளவர், பேரன்பு மிக்­கவர்”. ஆகவே நாம் இறை­வனின் அன்பை அனு­ப­விப்­ப­தற்­காக முயற்சி செய்வோம்.

இந்தத் தவக்­கா­லத்தை ஏற்­ப­டுத்தித் தந்த இறை தந்­தைக்கு நன்றி கூறுவோம். திருச்­ச­பைக்­கா­கவும் ஆயர், குருக்கள், கன்­னி­யாஸ்­தி­ரி­க­ளுக்­கா­கவும் பொது நிலை­யி­ன­ருக்­கா­கவும் மன்­றா­டுவோம்.

இந்த நாற்­பது நாட்­களில் இறை­வ­னு­டைய அன்பில் அதி­க­மாக நிலைத்து அவ­ரது பாடுகள், மர­ணத்தை தியா­னிப்­பதன் மூல­மாக அவ­ரது உரி­மை­யான அன்புப் பிள்­ளை­க­ளாக (மக­னாக/-- மகளாக) வாழ முயற்சி செய்வோம். 

உம் இரத்தத்தால் எம்மைக் கழுவும் 
உலகின் பாவம் போக்கும் இயேசுவே
உம் இரத்தத்தால் எம்மைக் கழுவும்
பிரன்சினா ஜோன் கெனடி