You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வெள்ளியில் ஞாயிறு திருப்­பா­டு­களின் காட்சி

March 19.2018


கிறிஸ்­த­வர்­களின் தவக்­கா­லத்தில் திரு­மறைக் கலா­மன்றம் தயா­ரித்து வழங்­கு­கின்ற மாபெரும் அரங்க ஆற்­று­கை­யான வெள்ளியில் ஞாயிறு திருப்­பா­டு­களின் காட்சி இம்­மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நான்கு நாட்­க­ளுக்கு இல 238, வௌ்ளியில் ஞாயிறு திருப்­பா­டு­களின் காட்சி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பிர­தான வீதி, யாழ்ப்­பாணம் என்னும் முக­வ­ரியில் அமைந்­துள்ள திரு­மறைக் கலா­மன்ற அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது.

வியாழன், சனி, ஞாயிறு தினங்­களில் மாலை 6.45 மணிக்கு ஆரம்­ப­மாகும் திருப்­பா­டு­களின் காட்சி வெள்ளிக்­கி­ழமை மட்டும் மாலை 7.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பிர­மாண்­ட­மான அரங்க அமைப்பு, காட்­சி­ய­மைப்பு, இசை­ய­மைப்பு, ஒலி, ஒளி போ

கிறிஸ்­த­வர்­களின் தவக்­கா­லத்தில் திரு­மறைக் கலா­மன்றம் தயா­ரித்து வழங்­கு­கின்ற மாபெரும் அரங்க ஆற்­று­கை­யான வெள்ளியில் ஞாயிறு திருப்­பா­டு­களின் காட்சி இம்­மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நான்கு நாட்­க­ளுக்கு இல 238, பிர­தான வீதி, யாழ்ப்­பாணம் என்னும் முக­வ­ரியில் அமைந்­துள்ள திரு­மறைக் கலா­மன்ற அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது.

வியாழன், சனி, ஞாயிறு தினங்­களில் மாலை 6.45 மணிக்கு ஆரம்­ப­மாகும் திருப்­பா­டு­களின் காட்சி வெள்ளிக்­கி­ழமை மட்டும் மாலை 7.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பிர­மாண்­ட­மான அரங்க அமைப்பு, காட்­சி­ய­மைப்பு, இசை­ய­மைப்பு, ஒலி, ஒளி போன்­ற­வற்­றுடன் அரங்­கிலும் அரங்கப் பின்­ன­ணி­யி­லு­மாக இரு­நூ­றுக்கும் அதி­க­மான கலை­ஞர்­க­ளுடன் மேடை­யேற்­றப்­ப­ட­வுள்ள வெள்ளியில் ஞாயிறு ஆற்­று­கைக்­கான ஏற்­பா­டுகள் துரி­த­க­தியில் இடம்­பெற்று வரு­கின்­றன.

திரு­மறைக் கலா­மன்ற இயக்­குநர் நீ.மரி­ய­சே­வியர் அடி­களார் திருப்­பா­டு­களின் நாடகப் பாரம்­ப­ரி­யத்­தினை தமிழ் மர­புக்­கு­ரிய தனித்­து­வங்­க­ளுடன் வளர்த்து வந்­துள்ளார். இயே­சுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற மும்­மையை மைய­மாகக் கொண்டு இந்­நா­ட­கங்கள் எழு­தப்­பட்­டாலும் அவற்­றிற்குள் காலத்­திற்கு ஏற்ப பல்­வேறு கோணங்­க­ளையும் பாடு­பொ­ருள்­க­ளையும் உட்­பு­குத்தி இவ் ஆற்­று­கைகள் மேடை­யேற்­றப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாண்டு மேடை­யேற்­றப்­படும் வெள்ளியில் ஞாயிறு திருப்­பா­டு­களின் நாட­கத்­திற்­கான எழுத்­து­ருவை திரு­மறைக் கலா­மன்­றத்தின் இயக்­குநர் நீ.மரிய சேவியர் அடி­க­ளாரும், பிரதி இயக்­குநர் யோ.யோண்சன் ராஜ்­கு­மாரும்  ஆக்­கி­யுள்­ளனர். இவ்­வாற்­றுகை முதன் முத­லாக 2010 ஆம் ஆண்டில் மேடை­யேற்­றப்­பட்­டது. இப்­பொ­ழுது இரண்­டா­வது தட­வை­யாக  மேடை­யேற்­றப்­ப­டு­கின்­றது. இதற்­கான நெறி­யாள்­கையை  பிரதி இயக்­குநர் யோ.யோண்சன் ராஜ்­குமார் மேற்­கொண்­டுள்ளார்.

இம்­முறை வெள்ளியில் ஞாயிறு திருப்­பா­டு­களின் காட்­சியின் மற்­று­மொரு சிறப்­பம்­ச­மாக மறை­மா­வட்ட ஆயர்கள் கலந்­து­கொள்­கின்­றமை அமை­கின்­றது. நான்கு நாட்­க­ளுக்கும் முறையே முதலாம் நாளில் யாழ்.மறை­மா­வட்ட ஓய்­வு­நிலை ஆயர் பேர­ருட்திரு.தோமஸ் சவுந்­த­ர­நா­யகம் ஆண்­ட­கையும், இரண்டாம் நாளில் திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட  ஆயர் பேர­ருட்திரு.நோயல் இம்­மா­னுவேல் ஆண்­ட­கையும், மூன்றாம் நாளில் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் பேர­ருட்­திரு.இம்­மா­னுவேல் பெர்னாண்டோ ஆண்­ட­கையும், நான்காம் நாளில் யாழ்.மறை­மா­வட்ட ஆயர் பேர­ருட்­திரு யஸ்ரின் பேனாட் ஞானப்­பி­ர­காசம் ஆண்­ட­கையும் கலந்துகொள்­வ­துடன் அரு­ளு­ரை­க­ளையும் வழங்­க­வுள்­ளார்­கள்.

ஆண்­டு­தோறும் திரு­மறைக் கலா­மன்­றத்தால் மேடை­யேற்­றப்­ப­டு­கின்ற திருப்­பா­டு­களின் காட்­சியை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பார்­வை­யி­டு­கின்­ற­மையும் இலங்­கை­யி­லேயே இடம்­பெ­று­கின்ற மிகப்­பெ­ரிய அரங்க ஆற்­று­கை­யாக இது அமை­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

வெள்ளியின் பின்னே ஞாயிறு வரு­வது இயற்கை நியதி. வெள்ளியி­லேயே ஞாயிறு தோன்­று­வது இறை­வனின் புதிய நிய­ம­னத்தின் விதி. வெள்ளியின் துன்பம் வாழ்வின் நிறைவு அல்ல.

இறையருளின் விடுதலைக்கு அதுவே வழி. வெள்ளியின் சிலுவை போன்ற மனித வாழ்வின் பட்டறிவு துன்பம் நீங்கிய உயிர்ப்பை கட்டியம் கூறி நிற்கின்றது. சிலுவை குறிக்கும் அனைத்துமே அவற்றின் ஊடாக கறைக ளைத் துடைத்து புடமிடப்பட்ட மனிதம் இறையருளில் உருவாவதற்கான நகர்வு களின் அடையாளங்கள். வெள்ளியில் ஞா யிறு என்பது இதனையே குறிக்கின்றது.