You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




"உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்" திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரை

2018-06-29


ஜூன் 28, இவ்வியாழன் மாலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 14 புதிய கர்தினால்களுக்கு தொப்பியும் மோதிரமும் அணிவிக்கும் சிறப்பு திருவழிபாட்டு நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இங்கு மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், "அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற்கு 10:32) என்ற சொற்களை மேற்கோள் காட்டி தன் மறையுரையைத் துவங்கினார்.

மேலும் அவர் தனது உறையில்

எருசலேமுக்குச் செல்லும் பயணத்தில் இயேசு தன் சீடர்களின் முன் நடந்து, தனக்கே உரிய பாணியில் அவர்களுக்குப் பாடம் சொல்லித்தருகிறார். எருசலேமுக்குச் செல்வது, தன் பாடுகளை எதிர்கொள்ள என்பதை இயேசு மூன்றாம் முறையாகத் தெளிவுபடுத்திய அவ்வேளையிலும் சீடர்களின் உள்ளங்களில் பதவி ஆசை, பொறாமை, உலக சக்திகளோடு சமரசம் போன்ற எண்ணங்கள் இருந்தன என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

சீடர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்திருந்த இவ்வெண்ணங்கள் அவர்களது உறவைப் பாதித்து, அவர்களை தன்னலச் சிறைகளில் அடைத்திருந்தாலும், இயேசு அவர்களுக்கு முன் சென்றதோடு, "உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்" (மாற்கு 10:43) என்ற கோணத்தில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டினார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.

இயேசு இவ்வாறு கூறியபோது, மழைப்பொழிவில் கூறிய பேறுபெற்றோர் எண்ணங்களையும், மரியாவின் புகழ்ப்பாடலையும் நினைவுக்குக் கொணர்கிறார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

எருசலேம் நோக்கி நாம் பயணிக்கும் வேளையில், இயேசு நம் முன் செல்கிறார், நமக்கு வழங்கப்படும் அதிகாரம், அடுத்தவர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதன் வழியே வருகிறது என்ற கருத்தை, கர்தினால்களுக்கும், புதிய கர்தினால்களுக்கும் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில், புனிதத் திருத்தந்தை 23 ஜான் அவர்களின் ஆன்மீக எண்ணங்களிலிருந்து ஒரு பகுதியை மேற்கோளாகக் கூறினார்.

"நான் ஏழையாகப் பிறந்தேன். ஏழையாக இறப்பதில் மகிழ்வடைகிறேன். வறியோரின் தேவைகளுக்கு ஏற்ப என்னிடம் இருப்பதை பகிர்ந்தளிப்பதில் நான் மன நிறைவு கொள்கிறேன்" என்று புனித 23ம் ஜான் அவர்கள் எழுதிவைத்த எண்ணங்களைக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : ta.radiovaticana இணையம்