You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாடு பூராவும் ஒரே தினத்தில் கொண்­டாடப்படவுள்ள தேவ இர­க­சிய ரோஜா மாதாவின் திரு­விழா

2018-07-01


தேவ இர­க­சி­யத்தின் ரோஜா மாதாவின் திரு­விழா இம் மாதம் 13 ஆம் திக­தி­யன்று நாடு தழு­விய ரீதி­யாக கத்­தோ­லிக்க மக்கள் அனை­வ­ராலும் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.

அன்­றைய தினம் காலை 10.30 மணிக்கு 15 கார­ணிக்க செப­மாலை ஒப்­புக்­கொ­டுக்­கப்­பட்டு, நண்­பகல் 12 மணிக்கு திருநாள் திருப்­பலி இடம்­பெறும்.

கொழும்பு மறை மாவட்­டத்தில் ராகம இலங்கை மாதா பசி­லிக்­கா­விலும், ஜா எல தெஹி­ய­காந்த புனித செப­மாலை மாதா தேவா­ல­யத்­திலும், ஜா எல பமு­னு­கம புனித சூசை­யப்பர் தேவா­ல­யத்­திலும், நீர்­கொ­ழும்பு புனித இரா­யப்பர் தேவால­யத்­திலும், நீர்­கொ­ழும்பு கடோல்­கல உயிர்த்த ஆண்­டவர் தேவா­ல­யத்­திலும்,மற்றும்  நீர்­கொ­ழும்பு கிம்­பு­ளா­பிட்­டிய புனித லூர்த்து மாதா திருத்­தலம், அவி­சா­வளை புனித மரியாள் திருத்­தலம் ஆகிய ஆல­யங்­களிலும் நடை­பெ­ற­வுள்­ளன.

யாழ்ப்­பாண மறை மாவட்­டத்தில் யாழ்.புனித மரியாள் பேரா­லயம், பண்­டத்­த­ரிப்பு புனித பாத்­திமா திருத்­தலம், கிளி­நொச்சி புனித மரியாள் தேவா­லயம், சுன்­னாகம் புனித அந்­தோ­னியார் தேவா­லயம் ஆகிய தேவா­ல­யங்­க­ளிலும், மட்­டக்­க­ளப்பு புனித ஆரோக்­கிய மாதா தேவா­ல­யத்­திலும் இந்த செப வழி­பாடு நடை­பெறும். மேலும், காலி மறை மாவட்­டத்தின் வெலி­கம குண­மாக்கும் இறை­வனின் தேசிய திருத்­தலம், சிலாபம் மறை மாவட்ட பண்­டா­ர­வத்தை புனித செப­மாலை மாதா தேவா­லயம், குரு­ணாகல் மறை மாவட்ட குளி­யாப்­பிட்­டிய புனித சூசை­யப்பர் தேவா­லயம், இரத்­தி­ன­புரி மறை மாவட்ட பலாங்கொடை தன்ஜன்தன்ன பரலோக இராக்கினி திருத்தலத்திலும் இந்த செபமாலை ஒப்புக்கொடுத்தல் வழிபாடுகள் நடைபெறவுள்ளன.