You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மடு அன்னையின் ஆடி மாத திருவிழா 2018

2018-07-02


மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

இன்நிலையில் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையிலும் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

இபபெருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசியை பெற்றனர்.