You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஏழைகளுக்காக இறங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

2018-07-02


 நம்மை அன்புகூர்ந்து, பேணிப் பாதுகாத்து வருகின்ற கடவுளோடு, நாம் மிகவும் உறுதியுடன் ஒன்றித்திருக்கும்போது, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்கள் மற்றும் சவால்களைத் தாங்கிக் கொள்ள இயலும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியன வாசகங்கள்.

 ஜூன் 29, இவ்வெள்ளிக்கிழமையன்று கர்தினால் Konrad Krajewski அவர்கள்,  ஏறத்தாழ 280 ஏழைகளுக்கு விருந்தளித்தார்.

வீடற்றவர், புலம்பெயர்ந்தவர், முன்னாள் கைதிகள் போன்ற 280 ஏழைகளுக்கு, புதிய கர்தினால் Krajewski அவர்கள், வத்திக்கானில் அளித்த இரவு உணவு விருந்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திடீரென அவ்விடத்திற்குச் சென்று, கடைசி மேஜையில் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து உணவருந்தினார். இரண்டு மணி நேரம் அங்கு இருந்து, அங்கிருந்தவர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார், திருத்தந்தை.

திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பானவரான, போலந்து நாட்டைச் சேர்ந்த, புதிய கர்தினால் Krajewski அவர்கள், திருத்தந்தையின் இந்தத் திடீர் வருகை குறித்து வியப்போடு நோக்குகையில், தான் ஏழைகளுக்காக இங்கு வந்தேன் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

-வத்திக்கான் வானொலி