You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் 189வது வருடாந்த திருவிழா

2018-07-15


அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 189வது வருடாந்த திருவிழா 15.07.2018 இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வியானி பெர்ணான்டோ ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

 புனித திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டன் பங்கு தந்தை லெஸ்லீ பெரேரா தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

15.07.2018 திருப்பலி பூசையின் பின் புனித அன்னம்மாளின் திருச்சசொரூப ஊர்வலம் ஆலயத்தில் இருந்து அட்டன் பிரதான பஸ் நிலையம்,  அட்டன் மல்லியப்பு சந்தி ஊடாக  மீண்டும்  ஆலயத்தை வந்தடைந்தது.

காலை 7.30 மணிக்கு சிங்களம், தமிழ் இருமொழிகளிலும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டு அதன்பின் 10.30 மணியளவில் விசேட திருப்பலியும் நடைபெற்றது. இதில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.

(க.கிஷாந்தன்)