You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு

2018-07-16


ஜூலை,11,2018. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலர்களில் ஒருவரும் துறவு சபையின் தலைவருமான புனித பெனடிக்ட் திருநாள், ஜூலை 11 இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருநாளை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நிறுவனங்களின் இதயமாக தனி மனிதர்கள் விளங்கும்போது, ஐரோப்பா தன் நம்பிக்கையை மீண்டும் கண்டடைகிறது. புனித பெனடிக்ட், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு

மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் வேளையில், ஆகஸ்ட் 26, ஞாயிறன்று டப்ளின் நகரில் அவர் தலைமையேற்று நிகழ்த்தும் திருப்பலிக்கென ஏற்பாடு செய்யப்பட்ட 5,00,000 நுழைவுச் சீட்டுக்கள் அனைத்திற்கும் மக்கள் முன்பதிவு செய்துவிட்டனர் என்று, அம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்