Kalaikesari
You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முதற்பலன் விழா - இஸ்ரவேல் மக்களுக்கு இறைவனின் கட்டளை

2018-08-02


இறைவனே அனைத்தையும் படைத்தவர் அவருக்கு எமது அனைத்து செயல்களின்போதும் முதல் மரியாதை வழங்கப்பட வேண்டும்.  இதனையே இஸ்ரவேல் மக்களின் இவ் விழா வலியுறுத்துகின்றது.


முதற்பலன் விழா, இஸ்ரவேல் மக்களுக்கு யேசு பிதாவால் கொடுக்கப்பட்ட கட்டளை. ஆண்டு தோரும் கிடைக்கும் விளைச்சலின் முதற்பலனை இறைவனிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இவ்விழாவின் முக்கிய அம்சமாகும்.


“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின் வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.


ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபது படி அளவுள்ள மரக் காலில், பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப்பழ ரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள். உங்கள் கடவுளின் காணி க்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. என்பன இறைவனால் சொல்லப்பட்ட இவ்விழாவின் விதிமுறைகளாகும்.


எகிப்தியரின் அடிமைத்தனத் திலிருந்து மீண்ட இஸ்ரவேல் மக்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறியது முதல் இவ் விழாவினை தவறாமல் நிறைவேற்றி வருகின்றார்கள். நிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15-ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16-ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடுகின்றார்கள் இஸ்ரேவலர்கள்.


இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதால் அல்ல. இறைவன் நம் வாழ்வின் முதல் நபராக இருக்க வேண்டும் என்பதானால் என்ற உன்னதமான கோட்பாடுடனே இவ் திருவிழா கொண்டாடப்படுகின்றது.