You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பல இலட்சம் பக்தர்களின் பிரார்த்தனைகளுடன் இன்று நிறைவுபெற்ற மடு அன்னையின் ஆவணித்திருவிழா

2018-08-15


இம் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மன்னார் மடு அன்னையின் வருடாந்த நவநாள் திருவிழாவின் இறுதி நாள் கூட்டுத்திருப்பலி சுமார் 7 இலட்சம் பக்தர்களின் பிரார்த்தனைகளுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. 


நாடளாவிய ரீதியில் சுமார்  7 இலட்சம் மக்கள் இன்றைய வழிப்பாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி கொடுக்கப்பட்டது.


இன்றுக் காலை 6.15 மணியலவில் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் தலைமையில்  தமிழ், சிங்களம், மொழிகளில்   மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை, அனுராதபுரம் ஆயர் பேரருட்திரு நோபர்ட் அந்நாதி ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் ரேமன் விக்ரமசிங்க ஆண்டகை ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றினர்.