You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கும் நாட் டிய குருவின் எதிர்பார்ப்பு

January 2 , 2018


‘ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கும் நாட்டிய குருவின் எதிர்பார்ப்பு, அவர்கள் எமக்கு அளிக்கும் கேரக்டர், அந்த கேரக்டரைப் பற்றிய சில நுட்பமான விடயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது, அந்த கேரக்டரின் சிறப்பம்சம், அந்த கேரக்டருக்குள் ஒரு கலைஞரால் எவ்வளவு ஆழத்திற்குச் சென்று, அதனை உள்வாங்கி பிரதிபலிக்கமுடியும் என்ற தெளிவு, பார்வையாளர் களுக்கு ஒரு கலைஞர் ஏற்கும் கேரக்டர் தான் தெரியவேண்டுமே தவிர எந்த இடத்திலும் இவர் ஒரு பெண் பரதநாட்டிய கலைஞர் என அடையாளம் வெளிப்படக்கூடாது.

இது போன்று சில எல்லைகளை வரையறுத்துக் கொண்டால் நாட்டிய நாடகத்தில் எந்த கேரக்டரையும் ஏற்க முடியும். நான் பொன்னியின் செல்வன் என்ற நாட்டிய நாடகத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தோன்றியிருக்கிறேன்.’ என்று,

நாட்டிய நாடகத்தின் போது ஒரு பரத கலைஞரின் பங்களிப்பு எப்படியிருக்கவேண்டும்? என்று கேட்டதற்கு, பரத நாட்டிய கலைஞரான செல்வி அபர்ணா ஜெயராமன் பதிலளித்துக் கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார்.

2017 ஆம் ஆண்டிற் கான டிசம்பர் இசைவிழாவின் போது சென்னை நாரதகான சபாவில் சந்தித்து இவருடன் தொடர்ந்து உரையாடினோம்.

ஐந்து வயதிருக்கும் போது எம்முடைய தந்தையின் விருப்பப்படி பரதநாட்டி
யம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். எம் முடைய முதல் குரு திருமதி உமா ஆனந்த்.

அவர்களிடம் தொடர்ந்து பத்தாண்டுகள் வரை கற்றேன். அரங்கேற்றமும் அவர் களின் முன்னிலையில் தான் நடைபெற்றது.

அவர்களைத் தொடர்ந்து  பரத நாட்டிய கலைஞரான திரு ஹரிபத்மன் அவர்களிடம் பரதத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

அத னைத் தொடர்ந்து தற்போது திருமதி ராதிகா வைரவேலன் அவர்களிடம் தொடர்ந்து கற்று வருகிறேன்.

இதனிடையே நாட்டிய கலைஞரான திருமதி  ஜோட்ஸ்னா நாரா
யணன் அவர்களின் நாட்டிய தயாரிப்பு களிலும் பங்குபற்றி வருகிறேன். சென்னையிலுள்ள அனைத்து முன்னணி சபாக்களி லும் மேடையேறி நடனமாடி வருகிறேன்.

பரத நாட்டியத்தை முழு நேர தொழிலாக ஏற்கவிருக்கிறீர்களா?

பரதநாட்டியம் எம்முடைய உணர்வி (Passion)ல் கலந்த ஒன்று. அதனால் எமக்கு நாட்டியம் ஆடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புவேன்.

அதே தருணத்தில் இதனை தொழில் முறையில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எண் ணுவதைவிட, இதனை முழு ஈடுபாட்டு உணர்வுடன் ஆடவேண்டும் என்பதில் தான் கவனமாக இருக்கிறேன்.

இந்த நிலையில் தான் தொடர்ந்து இருப்பேன். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்  பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடிக்கொண் டேயிருக்க வேண்டும். இது தான் எம்முடைய நிலைப்பாடு.

எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாகத் தொடரும் மார்க்கத்தில் மாற்றம் வேண்டும் என்று இன்றைய இளம் கலைஞர்கள் வலியுறுத்துகிறார்களே.. ?

பரதநாட்டியக் கலைக்கு இருக்கும் இந்த வரலாற்று பாரம்பரியம் தான் அதன் மூல வலிமை. தொன்மை வாய்ந்த இந்த கலையை மாற்றம் ஏதுமில் லாமல் கற்பது தான் நாம் அந்த கலைக்கு அளிக்கும் மரியாதை.

இந்த கலை ஒரு தெய்வீகக் கலை. இந்த கலையில் மாற்றம் வேண்டும் என்று கருதுபவர்கள் இந்த கலையினை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கற்கத் தொடங்கினால் இதன் உன்னதத்தை உணர்ந்து தங்கள் கருத்தையே மாற்றிக் கொள்வார்கள் என்பது எம்மு டைய அவதானிப்பு.

இப்போதுள்ள பெற்றோர்கள், நல்லதொரு குருவை அடையாளங் கண்டு அவர்களிடத்தில் தங்களது பிள்ளைகளை நாட்டியம் கற்க அனுமதிக்கிறார்கள்.

இதுவும் பாரம்பரியம் தொடரவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது என எண்ணுகிறேன். அதனால் பரதநாட்டியத்திற்கான பாரம்பரி யம் மாறவே மாறாது என்று உறுதியாக கூறலாம்.

தற்போதைய நாட்டியக்குருக்கள் மார்க்கத்தின் ஒரு அம்சமான நிருத்தாவை தனியாக கற்பிக்காமல், வர்ணத்துடன் இணைத்து அரங்கேற்றுகிறார் களே இது குறித்து..?

பரதநாட்டியத்தை கற்பிக்கும் ஒவ் வொரு குருமார்களும் ஒவ்வொரு பாணியை பின்பற்றுகிறார்கள். அவர்கள் நிருத்தாவை கற்பிக்காமல் இருப்பதில்லை. அபிநயத்திற்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கிறார்களோ அதேயளவிற்கு நிருத்தாவிற்கும் கொடுத்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் நிருத்தாவில் நுட்பமான பல புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு கற்பிக்கிறார்கள்.

என்ன ஸ்வரம், என்ன ஒப்பீடு, அதில் என்ன புதிதாக படைக்க இயலும் என்று நீள்கிறதே தவிர குறைய வில்லை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நிருத்தா குறைந்தி
ருக்கிறது போன்று தோன்றினா லும்,ஈடுபாட்டுடன் ரசிக்கும் போது நிருத்தா குறைய வில்லை என்று தோன்றும்.

நாட்டிய குருக்கள் அனைவரும் இதன் தொன்மையையும் பாரம் பரியத்தையும் காப்பாற்றிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

நீங்கள் மோகினியாட்டம் என்ற கலையை கற்றுக் கொண்டதன் பின்னணி?

நாட்டியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தான் மோகி னியாட்டத்தையும் கற்றுக்
கொண்டேன். மோகி னியாட்டத்தின் உலக அடையாளமாகத் திகழும் திருமதி கோபிகா வர்மா அவர்களிடம் ஐந்தாண்டுகள் கற்றேன்

. மோகினியாட்டம் முழு வதும் ஒரு சர்க்கிளாகத்தான் அமைந்திருக்கும். பரதநாட்டியத்தில் லைன்ஸ் தான் அதிகமாக இருக்கும்.

மோகினியாட்டத் தில் கண், முகம் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி பாவ னைகளை வெளிப்படுத்தக்கூடிய தாக அமையப் பெற்றிருக்கிறது.

பரத நாட்டியத்தில் பாவனை உண்டு. ஆனால் அவை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்காது. அதே சமயத்தில் பரதத்தில் ஜதிஸ்வரம் ஏராளம். ஏன் இதன் ஜீவன் என்று கூட குறிப்பிடலாம். ஆனால் மோகினியாட்டத்தில் ஜதிஸ்வரம், நட்டுவாங்கம் கிடையாது.

பாட்டுகளும், ஸ்வரங் களும் மட்டுமே. ஆனால் இவ்விரண்டு கலைகளின் மூல நோக்கம் பக்தி சுவையே. இதில் மாற்றமில்லை.

அத்துடன் எதிர்காலத்தில் நாட்டிய நாடகத்தை வடிவ மைக்கும் எண்ணமும் இருப்பதால் அதற்கு பயன்படும் என்ற கோணத்திலும் இதனை கற்றேன் என குறிப்பிடலாம்.

ஒவ்வொரு நாட்டிய மங்கைக்கும் அரங்கேற்றம் முதல் இலக்காகவும், பின்னர் ஒரு நாட்டிய நாடகத்தை மேடையேற்றவேண்டும் என்பதை இலக்காகவும் கொண்டிருக்கிறார்களே இது ஆரோக்கியமான போக்கு தானா?

வாழ்க்கையில் எப்போதும் முன் னோக்கி செல்லவேண்டும் என்ற உந்துதல் தான் இதற்கு காரணம். எம்முடைய கேள்வி ஞானத்தில் அரங்கேற்றத்திற்கு பிறகு நாட்டியத்திலிருந்து விலகிய பெண் கள் ஏராளம்.

அதனால் அதையும் கடந்து ஒரு நாட்டிய நாடகத்தை நோக்கிய பயணிக்கிறார்கள் என்றால் அதனை வரவேற்பது தான் ஆரோக்கியமானது.

அரங்கேற்றம் என்பதை தன்னுடைய கலைப்பயணத்தின் முதல்படி என்ற எண்ணமிருப்பவர்களால் தான் இப்படி தொடர்ந்து பயணிக்க இயலும் என்றும் நம்புகிறேன்.

நாட்டிய நாடகம் மட்டுமல்ல, ஒரு பாடலை உருவாக்குவது, உருவான பாடலுக்கு இசையமைப்பது என தன் னுடைய படைப்பு எண்ணத்தை மேம் படுத்திக் கொள்ளலாம். இது பின்னாளில் அவர்களுக்கான கலை பங்களிப்பாகவும் இருக்கக்கூடும்.

2017 டிசம்பர் இசை விழா குறித்து..?

கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பார்வையாளர்கள் என அனைவரிடத்தி லும் வழக்கமான உற்சாகம் இருந்ததைக் காண முடிந்தது.

நாரதகான சபாவின் மெயின் ஹாலிலும், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸிலும் இந்த ஆண்டு மேடையேறி, எம்மை மேம்படுத்திக் கொண்டேன். அத்துடன் எம்முடைய குரு ராதிகா வைர வேலன் அவர்களின் வடிவமைப்பில் புதிதாக  உருவாக்கப்பட்ட சிலவற்றை மேடையேற்றிய சந்தோஷமும் இருந்தது.

வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவது..?

இன்றைய சூழலில் சமூகத்தின் பொதுவெளியுடன் இணையும் இளைய தலை
முறையினர் இரண்டு நேரெதிர் மனநிலையுடன் தான் உலா வருகிறார்கள். இவர் களைச் பண்படுத்தி, சமூகத்தோடு இணக் கமான போக்கை கடைப்பிடிக்க கலைகள் தான் உதவுகிறது.

அதிலும் பரதநாட்டிய கலை அதிகளவிலான பங்களிப்பை செய்
கிறது. அதனால் கலையை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களை வெற்றிக் குரிய பாதையை நோக்கி வழிநடத்தும்.