You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அட்டனில் மூவரின் பரதநாட்­டிய அரங்­கேற்றம்

January 3 , 2018


அட்டன், நவ­ரச நிருத்­திய நர்த்­த­னா­லயா நடனப்பள்ளி, இந்­தி­ய கலைக்­காவிரி நட­னக்­கல்­லூரியுடன் இணைந்து நடத்தும்  பகுதி நேர கற்கை நெறியின் மூன்­றா­வது அரங்­கேற்ற நிகழ்வு எதிர்­வரும் ஜன­வ­ரி­ மாதம் 6 ஆம் திகதி  அட்டன் பிரின்ஸ் மண்­ட­பத்தில் இடம்­பெற­வுள்­ளது.

 இந்­நி­கழ்வில் ஒரே மேடையில், ப.அஷ்­விதா, எம்.தில்­ஷா­யினி, குமா­ர­வேல் ஜெய்­தா­ரணி ஆகிய மூன்று மாண­வி­களின் அரங்­கேற்றம் இடம்­பெ­றவுள்ளது. 

இவர்கள் மூவரும் அட்டன் நவ­ரச நிருத்­திய நர்த்­த­னா­லயா  நட­னக்­கல்­­லூ­ரியின் பணிப்­பாளர் ஸ்ரீ­மதி ராணி­சு­லோச்­சனா சிவ­ரா­ஜாவின் மாண­வி­க­ளாவர்.  இந்­நி­கழ்வில் காப்­பா­ள­ராக தமிழ்நாடு திருச்சி மாவட்டம்  தொலைக்­கல்வி நிகழ்ச்சி திட்­டத்தின் பணிப்­பாளர் அருட்­­தந்தை  அந்­துவான் கலந்துகொண்டு சிறப்­பிக்­க­வுள்ளார்.

இலங்கை சின்­மியா மிஷன் அமைப்பின் ஆச்­சார்யா பிர­ம்மச்­சாரி கார்த்­திக் ­சை­தன்யா முன்­னிலை வகிக்க பிர­தம அதி­தி­யாக மத்­திய மாகாண தமிழ் கல்வி இந்து கலா­சார அமைச்சர் ம.ராமேஷ்­வரன் கலந்து கொள்­கிறார்.