You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஒரே­நே­ரத்தில் 12 நிமி­டங்கள் பரதம் ஆடி சாதனை

January 19 , 2018


இந்­தி­யாவின் பல பாகங்­க­ளிலும், அமெரிக்கா, இங்­கி­லாந்து உட்­பட உலகின் பல நாடு­க­ளிலும் 31.12.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை லண்டன் நேரம் 10 மணிக்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் ஒரே­நே­ரத்தில் 12 நிமி­டங்கள் பரதம் ஆடி சாதனை புரிந்­தனர்.

இந்­தி­யாவின் UDear என்ற அமைப்பு இதனை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இங்­கி­லாந்து நாட்டின் பொறுப்பை ஏற்று பல ஆசி­ரி­யர்­களை இணைத்து நிகழ்த்­தி­யவர் பரத நாட்­டிய ஆசி­ரியர் திரு­மதி ஜெயந்தி யோக­ராஜா ஆவார்.

165 தமிழ் மாண­வர்கள் கலந்து கொண்ட இச்­சா­த­னையை Harrow Council முன்னாள் நக­ர­பிதா சுரேஷ்­ கி­ருஷ்ணா துவக்கி வைத்­தார். முனைவர் நித்­தி­யா­னந்தன், திரு­மதி அம்­பிகா தாமோ­தரம் உட்பட பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.