You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நீர்­வே­லியில் பர­த­ந­டன அரங்­கேற்றம்

March 11.2018


பர­தக்­கலை இலங்­கைக்­கான அடை­யா­ளங்­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்டும் என்ற குரல் மேலோங்கி வரு­கின்ற சூழலில் -முற்­றிலும் ஈழத்தை மையப்­ப­டுத்­திய சாகித்­தி­யங்­களைக் கொண்டு இடம்­பெற்ற பர­த­ந­டன அரங்கேற்ற நிகழ்வு அண்மையில் யாழ். நீர்­வே­லியில் இடம்­பெற்­றது.

நீர்­வேலி பொன்­சக்தி கலா­கேந்­திரா நர்த்­தனப் பள்­ளியின் இயக்­கு­நரும் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக நட­னத்­துறை விரி­வு­ரை­யா­ள­ரு­மா­கிய சத்­தி­யப்­பி­ரியா கஜேந்­திரன் தனது மாண­வி­யா­கிய கஜீ­பனா சிவ­னேஸ்­வ­ரனை அரங்­கேற்­றி­யி­ருந்தார்.

கஜீ­பனா, யாழ். சுண்­டுக்­குளி மகளிர் கல்­லூ­ரியில் தரம்–11 இல் கல்வி கற்கும் மாணவியாவார். இவர் தனது 4 வயது முதல் நட­னத்தில் வேட்­கை­யுற்று - நடனம் பயின்று அரங்­கேற்றம் கண்­டுள்ளார்.

அரங்­கேற்றம் இடம்­பெற்ற நீர்­வேலி பொன்­செல்வ மகால் மண்­டபம் நட­னத்­துறை ஆர்­வ­லர்­களால் நிரம்பி வழிந்­தது. விவ­சாயக் குடும்பம் ஒன்றின் பின்­ன­ணியில் அரங்­கிற்கு வரும் செல்வி எவ்­வாறு துலக்­க­மு­றுவார் என்­பதைக் காணப் பலரும் ஆவ­லுற்­றி­ருந்­தனர்.

மிடற்­றி­சைையை அ.அமிர்­த­சிந்­து­ஜனும் மிரு­தங்க இசையை க.கஜனும் வயலின் இசையை அ.ஜெய­ரா­மனும் வழங்­கினர். நட்­டு­வாங்­கத்தை  செல்­வியின் குரு மேற்­கொண்டார். குரு­வா­கிய சத்­தி­யப்­பி­ரி­யாவின் நாட்­டிய அமைப்­புக்­க­ளுடன் கலா­ஷேத்­தி­ராவின் நாட்­டிய அமைப்­புக்­களும் கஜீ­வ­னாவின் ஆற்­று­கைக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தன. தவ­நாதன் ரொபேட் மற்றும் அமரர் அருட்­கவி சீ.விநா­சித்­தம்பி ஆகி­யோ­ரது சாகித்­தி­யங்கள் நடன உருப்­ப­டி­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.