You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்

October 01, 2014


கோயில்கள், இறைவன் உறைவிடங்களாக மட்டுமன்றிச் சிற்ப ஓவியக் கலைகளின் காட்சியகமாகவும் இருக்கின்றன. கலையுணர்வினூடாக கடவுளுணர்வை எழுப்புவதற்கு ஒரு வாயிலாக கலையை பண்டைத் தமிழ் மன்னர்கள் ஊக்குவித்து வந்தனர். கலையுணர்வும் சமயப்பற்றும் கொண்ட மன்னர்களும் மக்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கவின்மிகு சிற்பங்களையும் கண்கவரும் ஓவியங்களையும் பெற்றிலங்கும் எண்ணற்ற கலைக் கோவில்களை உருவாக்கியுள்ளனர். காலச் சூழலில் பேரரசர்கள் மறைந்த பின்னரும் அவற்றின் அழியாப் பெரும்புகழை உலகிற்கு பறைசாற்றி நிற்பவை தெய்வத் திருக்கோயிலும் அவற்றை அணி செய்யும் அழகுமிக்க கலைச் செல்வங்களுமாகும். மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியப் பேரரசர்கள் கி.பி. 6 ஆம் நூற்றாண் டிலிருந்து கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்து வந்தனர். பாண்டியர் காலச் சிற்பக்கலையினை முற்காலப் பாண்டியர் சிற்பக்கலை எனவும், பிற்காலப் பாண்டியர் சிற்பக்கலை எனவும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். முற்கால பாண்டியர் ஆட்சியில் குடைவரைக் கோயில்களும், ஒற்றைக்கற் கோயில்களும், திறந்த வெளிப்பாறைச் சிற்பங்களும் சில கட்டடக் கோயில் களும் உருவாக்கப்பட்டிருக்கின் றன. பிற்கால பாண்டியர் ஆட்சியி ல் கட்டிட கோயில்களே மிகுதியாக எழுப்பப்பட்டுள்ளன. முற்கால பாண்டியர் ஆட்சியில் மிகப்பல குடைவரைக் கோயில்களும் ஒற்றைக் கற்கோயில்களும் பாறைச் சிற்பங்களும் அதிகமாகத் தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன. பிற்காலப் பாண்டியராட்சியில் கட்டிடக் கோயில்கள் கட்டப்பட்டன. மேலும் முன்னர் இருந்த பல கோயில்களில் திருசுற்று மதில்கள், கோபுரங்கள், மண்டபங்கள் முதலியனவும் புதியனவாகத் தோற்றிவிக்கப்பட்டன.