You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குகைக்குள் சிக்கிய சிறுவர்களுக்கு கைகொடுத்த ஆன்மீகம்

2018-07-11


நம்மில் பலர் இறை நம்பிக்கை, ஆன்மீக செயற்பாடுகள் போன்றவற்றை பெரிதாக கருத்தில் கொள்ளவதில்லை. இருப்பினும் உலகில் நம் கண்முன் அரங்கேறும் பல நிகழ்வுகள் இதனை பறைச்சாற்றுகின்றன. குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வும் இவ்வாரான ஒன்றே!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய பன்னிரண்டு தாய் சிறுவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பற்றி இன்று அனைவருக்கும் தெரியும் இவர்கள் தொடர்ந்து  இரண்டு வாரங்களுக்கு மேலாக குகைக்குள் சிக்கியிருந்தனர். 

இத்தனை பெரிய சங்கடத்திலும் அந்த சிறுவர்கள் பதட்டம் அடையாமல் அமைதியாக இருப்பதை அங்கிருந்து அவர்களால் பகிரப்பட்ட கானொளிகள் மூலம் அறிய முடிகின்றது.போதுமான அளவிற்கு காற்றும், சுத்தமான குடிநீர்  இல்லாத நிலையிலும்  அவர்கள் 18 நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். 

இவர்களின் இந்த தைரியத்திற்கு அவர்களுடன் இருந்த பயிற்றுவிப்பாளர் எகாபோல் தான் காரணம். எகாபோல் தமது இக்கட்டான சூழ்நிலையை அறிந்தவுடன் கைவசம் இருந்த உணவை பகிர்ந்து கொடுத்து ஒரு சில நாட்கள் அவர்களை காப்பாற்றியுள்ளார்.

உணவுப்பொருட்கள் தீர்ந்தவுடன்  தியானத்தின் மூலம் உடலில் சக்தியை எப்படிச் சேமிப்பது என்பதை சிறுவர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, சிறுவர்களை ஒரே இடத்தில் பெரும் பகுதி நேரம்  அமர வைத்து,  அவர்களின் சக்தி செலவாகமலும்,  சோர்வடையாமலும் அவர் பாதுகாத்துள்ளார்.இதனால்தான் 15 நாட்களுக்கு மேல் உணவில்லாமல் அவர்களால் உயிர் வாழ முடிந்ததுள்ளது.

இறை நம்பிக்கையும் ஆன்மீகமும் நமக்கு எந்த நிலையிலும் உதவும் ஆயுதங்களே என்பதை நாமும் உணரவேண்டும்.