You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் மனம் ஒரு அற்புத விளக்கு !

2018-07-29


உங்கள் வாழ்வில் எதிர்மறையான சூழல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அல்லது மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலும் உடனே கலங்காதீர்கள். அவற்றை அடக்கவும் நினைக்காதீர்கள். அதற்கு உணர்வுகளை கொடுக்காதீர்கள். அவற்றை தடுக்காமல் விலகி செல்ல விடுங்கள்.
உங்கள் வாழ்வில் எதிர்மறையான சூழல் எப்படி வந்தாலும் முதலில் மனம் பதட்டமடையாமல் நன்கு புரிந்து கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை யோசியுங்கள்.


எனக்கு ஒன்றுமே இல்லையே, எல்லோரை போன்ற ஒரு வாழ்க்கை அமைய வில்லையே இப்படியே மனதை போட்டு குழப்பி கொண்டே இருந்தீர்கள் என்றால் எப்படி மனதில் நல்ல நேர் மறையான எண்ணங்கள் தோன்றும். தோன்றவே தோன்றாது அல்லவா. மனதில் ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம் வரும் போது தான் நீங்க எதிர்மறை உள்ளே அனுமதிக்கிறீங்க உங்கள் மனதில் ஒன்றுமே இல்லாத வெற்று இடத்தில் தான் காற்று கூட நுழைய முடியும்.அப்படி ஒரு வெற்றிடமாக உங்க மனதை மாற்றுங்கள். இந்த வெற்று இடத்தை நிறப்ப எல்லா நண்மைகளும்,நாம் விரும்பிய அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர இருப்பதாக எண்ணுங்கள்.உங்கள் எண்ண அலைகளை உறுதி படுத்துங்கள்.அந்த எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் பரவவிடுங்கள்,நடக்கும் நடந்தே தீரும் என்ற தீர்க்கமாக முடிவு செய்யுங்கள்.


அதன் பிறகு பாருங்க உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும்,உங்கள் ஆசைகள் உங்கள் வெற்றிடத்தை நிறப்பி இல்லை என்ற சொல்லை நீக்கி நிறைந்து இருக்கு என்ற சொல்லை சொல்ல வைக்கும். எதையுமே நம்பிக்கையோடு செய்து வந்தால் வெற்றியும், மகிழ்ச்சியும் உங்களை சுற்றியே இருக்கும்.
உங்கள் மனம் ஒரு அற்புத விளக்கு நல்லஎண்ணங்களால் எண்ணெய் ஊற்றுங்கள் மகிழ்ச்சி எனும் தீபம் சுடர்விட்டு எரியும்.