You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இலங்கையில் இடம்பெறவுள்ள நான்காவது முருகபக்தி மாநாடு நாளை ஆரம்பம்

2018-08-01


இலங்கையில் இடம்பெறவுள்ள நான்காவது முருகபக்தி மாநாட்டில் அனைவரையும் கலந்துசிறப்பிக்குமாறு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ உமாமகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நான்காவது முருகபக்தி மாநாடு நாளை முதல் ஐந்தாம் திகதி வரை கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலய அரங்கில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது அனைத்துலக முருகபத்தி மாநாடு இதுவென சுட்டிக்காட்டியுள்ள அவர் மலேசியா சுவிட்சர்லாந்து தென்னாபிரிக்காவில் ஏற்கனவே மாநாடுகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘உலகெங்கும் கோயில் கொண்டு விளங்கும் பெருமானின் அருட்புகழை வேதாகம புராண இதிகாச இலக்கிய பன்னிரு திருமுறை சித்தர்நெறி என முருக ஆராதனையின் பன்முக ஆய்வின் வண்ணம் பக்திநெறியை நிலைநிறுத்தல்’ என்கின்ற பிரதான நோக்கினையும் முருக வழிபாட்டின் உண்மை நெறியை உலகறியச் செய்தல் முருகப் பெருமான் வழிபாட்டினையும் தத்துவங்களையும் உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்லுதல் உலகின் பல பாகங்களில் வாழும் முருக பக்தர்களை ஒருங்கிணைத்தல் முருகப்பெருமான் குறித்த பல்துறை ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைப் படைப்பதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் களமமைத்துக் கொடுத்தல் மாநாட்டிற் படைக்கப்படும் விவாதிக்கப்படும் செய்திகளை நூல்வடிவிற் பதிவு செய்தல் இளந்தலைமுறையினரிடையே முருக வழிபாடு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் முதலான இதர நோக்கங்களை முன்னிறுத்தியே இம் முருகபக்தி மாநாடுகள் உலகளாவிய ரீதியில முன்னெடுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம் மாநாட்டின் பிரதம அதிதிகளாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமாகிய கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி (னுச) பொ.சுரேஷ் அவர்களும் மேனாள் மலேசியத் துணை அமைச்சர் தான்ஸ்ரீ-டத்தோ க.குமரன் அவர்களும் மலேசியா சக்தி அறவாரியத் தேசியத் தலைவர் திருக்கயிலைச் செல்வர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.