You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் மனதின் அலைவரிசையை மாற்ற மூன்று நிமிடம் போதும்

2018-08-02


உங்கள் மனம் ஏதாவது ஒரு பிரச்சினையை நினைத்து குழப்பம் கொள்கின்ற போது நாம் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றோம். 
இவ்வாரான சூழ்நிலையில் இருந்து எம்மை விடுவித்துக்கொள்ள சிறியபயிற்சி ஒன்று உள்ளது. இப் பயிற்சியை தொடர்ந்து மூன்று நிமிடம் செய்வதனால் நம் மனதை இயல்பு நிலைக்கு மிக எளிதாகக் கொண்டுவரலாம் 


நமது எண்ணங்களும் , உணர்வுகளும் ஒரு பண்பலை அலைவரிசை போலவே செயல்படுகிறது. 


நாம் அதிகமாகக் கேட்கும் இசை எம்மை ஆக்கிரமிப்பது போன்று, நாம் எண்ணும் எண்ணங்களும் எம்மை ஆட்சிசெய்கின்றன. 


நீங்கள் ஏதேனும் மனஉளைச்சலிள் தவித்துக் கொண்டு இருக்கும் போது உங்கள் வாழ்க்கையில் இதுவரை கிடைத்த நல்ல விடயங்களுக்கு மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.


இதன்மூலம் எமது மனதின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றப்பட்டு சகஜமான நிலைக்கு வருவீர்கள். 
உங்களுக்கு இந்த நொடி வரை வாழ்க்கையில் கிடைத்து கொண்டு இருக்கிற மற்றும் கிடைக்க போகிற எல்லா நல்ல விடயத்திற்கு ( குறைந்தது மூன்று நிமிடம் ) மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள். 


இதன்மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை இயல்பு நிலைக்கு மாற்றபட்டு மகிழ்ச்சி நிலைக்கு வருவீர்கள். 


உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும். உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். 
தெளிவான மனநிலைக்கு வந்ததன் பின்பு உங்கள் மனஉளைச்சலுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான முடிவை எடுக்கலாம்.