You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அனைவரும் ஒன்று சேரும் மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றம்

2018-08-07


இன மத பேதமின்றி நாடெங்கும் பல லட்சம் மக்கள் பங்கேற்று சிறப்பிக்கின்ற மன்னார் மடு அன்னையின்ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 


நானூறு வருடங்கள் பழைமையும் சிறப்பும் கொண்ட இவ் ஆலயத்தின் பெருந்திருவிழா இம்மாதம் 15 ஆம்திகதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தைஎமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார். 


இவ் ஆலயம் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், நவநாள் திருவிழாவில் பங்கேற்கும்பக்தர்கள் ஆலய வலாகத்தில் தங்கி தமது வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இவ் காலப்பகுதியில் விசஜந்துக்களினாலோ வன விலங்குகளினாலோ தாக்கப்படாமல் பக்தர்களை காக்கின்றார் மடு அன்னை. 


இத்தகைய சிறப்பு மிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவின் கொடியேற்ற வைபவத்தில்அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளையிடம் இருந்து மடு பரிபாலகர் பொறுப்பை ஏற்றுள்ளார் அருட்தந்தைபெப்பிசோசை . இவ் நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவான பக்தர்கள்கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரசஅதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 


மேலும் எதிர்வரும் 14ம் திகதி மாலை 6.15 மணிக்கு வெஸ்பர்ஸ் ஆராதனையும் திவ்விய நற்கருணைவழிபாடும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ளது.