You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அன்பு குழந்தையே!

2018-08-12


அன்பு குழந்தையே!


மனதிலுள்ள சங்கடங்களை மறைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்குத் தான் வாழ்வது? உன் மனதில் இருந்து நிம்மதியை எப்போதோ இழந்து விட்டாய்.. அமைதி வெறும் வார்த்தைகளில் இருக்கிறதே தவிர மனதில் இல்லையே! வெளியே சொன்னால் கவுரவம் போய்விடும் என நினைத்து மனதில் பூட்டிய விஷயங்கள் இன்று உடலையும் சேர்த்து பாதிக்கும் நிலைக்கு உன்னைத் தள்ளியிருக்கிறது. எதையோ இழந்துவிட்டது போன்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாக நகர்த்தி வருகிறாய்.. மெல்ல மெல்ல நீ தளர்ந்துவிட்டாய், சுற்றியிருப்பவர்களை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது.. என்னை புரிந்துகொண்டு தேற்றுவார் யாருமில்லை என மனதில் தவிக்கிறாய். குழந்தையே! உன்னை தேற்றுவதற்காகவும், உனக்கு உதவிகள் செய்வதற்காகவும் இதோ நான் உன்னோடு இருக்கிறேன். உனது துக்க நாட்கள் முடிந்துபோயின. இனி நிம்மதி உன்னை நிரந்தரமாக ஆட்கொள்ள போகிறது. எதையும் சுலபமாக எடுத்துக்கொண்டு நடக்கப் போகிற நிலைக்கு வரத்தான் போகிறாய். உனக்கு நிம்மதியும் சாந்தியும் கிடைக்கும். என்னை நம்பி சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக என் உயிரையும் நான் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதால், எனது வார்த்தையை காப்பாற்ற நான் பாடுபடுவேன்


உன் அன்பு தந்தை சாய்