You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அபார திறமைகளின் இருப்பிடம் இடக்கைப் பழக்கம்

2018-08-13


ஏனையவர்களிடம் இருந்து நடத்தை மூலமாக வேறுபடும் இடக்கைப் பழக்கமுள்ளோர் பற்றி முன்னைய காலங்களில் தவறான கருத்துக்கள் இருந்தன. இதனால் இப் பழக்கமுடையவர்கள் சிறுவயதிலேயே வலக்கை பழக்கத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். காலப்போக்கில் இதைப் பற்றிய தெளிவு அனைவரிடமும் ஏற்படவே இன்று இடக்கைப் பழக்கமுள்ளோர் சாதாரணமாகவே பார்க்கப்படுகின்றார்கள். மற்றும் இவர்கள் பல துறைகளிலும் அபார திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளைக் கௌரவிப்பதற்காகவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் ஒவ்வொரு வருடமும் இந்நாள் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. இந்த நாளில் இடக்கைப் பழக்கமுள்ளவர்களின் திறமைகள் ஊக்கு விக்கப்படுவதுடன் வாழும் சாதனையாளர்களும் பாராட்டப்படுகின்றனர். 


பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 1976 ஆம் ஆண்டு முதல் இன் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
இடதுகைப் பழக்கம் ஏன் ஏற்படுகின்றது. 
இடதுகைப் பழக்கமானது பிறப்பிலேயே ஏற்படுகின்றது. எமது செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மூலையாகும் மூலை செயலிழக்கு மாயின் மனிதன் செயற்பட முடியாத நிலை ஏற்படுகின்றது. மூளையின் இரண்டு அரைக்கோள வடிவில் உள்ள மூளையம் எமது உடலின் இயக்கத்துக்கு பொறுப்பாகின்றது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுபக்க உறுப்புகளையும், வலதுபக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றமையால் வலது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர். ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கிச் செயல்படுவதால் வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன இதனால் இவர்கள் இடது கை பழக்கம் உடையவர்களாக அறியப்படுகின்றனர். 


இடதுகைப் பழக்கம் உடையவர்களின் விசேட திறமைகள். 


இவர்கள் சிறந்த இசை மற்றும் / அல்லது கலை திறன்களைக் கொண்டிருப்பர் மற்றும் சிறந்த துப்பறிவாளராக இவர்களால் செயற்பட முடியும். 


குணத்தில் இவர்கள் உணர்ச்சி மிக்கவர்களாகவும், அன்பானவர்களாகவும் உள்ளனர். 


சிறந்த கற்பனை கற்பனையாளராக அறியப்படும் இவர்கள், பெரும்பாலும் விளையாட்டுகளில் பெரும் வெற்றியை அடைகிறார்கள். 


இவர்களின் கணித கணக்கீடுகள் ஏனையவர்களை விடவும் மிகவும் வித்தியாசமாகவும் திறமையாகவும் உள்ளது. 


இடதுகைப் பழக்க சாதனையாளர்கள் சிலர். 
நரேந்திர மோடி, 
பாரக் ஒபாமா, 
சச்சின் டெண்டுல்கர், 
சவ்ரவ் கங்குலி, 
சார்லி சாப்ளின், 
பில்கேட்ஸ், 
அலெக்ஸாண்டர் தி கிரேட், 
ஜெ.கே.ரெளலிங்