You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சபரிமலை புத்தரிசி பூஜை தரிசனத்திற்கு தடையான பம்பை நதி

2018-08-14


சபரிமலை ஐயப்பன் ஆலயம் நிறை புத்தரிசி பூஜைக்காக, இன்று (14-08-2018) மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இப் பூஜை நாளை காலை, 6:00 - 6:30 மணிக்குள், நடைபெற உள்ளது. எனினும் ஐயப்பன் தரிசனம் காண பக்தர்களை வர வேண்டாம் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 


பம்பை ஆறு கரைபுரண்டு ஓடுவதால், . பக்தர்கள், பம்பையில் கடக்கும் இரண்டு பாலங்களும், பம்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தேவஸ்தான மண்டபங்கள் என்பன  தண்ணீரில் மூழ்கியுள்ளன. பக்தர்களின் நலன்கருதி தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருவோர், எரிமேலி, பத்தினம்திட்டா, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவர் என்றும், தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும் சன்னிதானத்தில் நிறைபுத்தரிசி பூஜை வழக்கம் போல் நடைபெறும் என்பதுடன் பம்பை ஆற்றின் வெள்ள நீர் குறையும் பட்சத்தில் மீண்டும் பக்தர்கள் மலையேர அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.