You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பக்திகோசத்துடன் இடம் பெற்ற நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம்

2018-08-16


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய  வருடாந்த  மஹோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன்  இன்று  ஆரம்பமாகியுள்ளது. 

இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்றைய தினம் சம்பிரதாயப் பூர்வமாகஇடம்பெற்றிருந்தது. 

இன்று காலை நல்லூர்க் கந்தனுக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடை தொடர்ந்து பக்தர்களின் பக்திகோசத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது. 


 

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம் பெற உள்ள  இவ்திருவிழாவில்  19 ம் திகதிசனிக்கிழமை  மாலை  05 மணிக்குச் சப்பரத் திருவிழாவும்,

20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21ம் திகதி  காலை 07 மணிக்குத்  தீர்த்தத்  திருவிழாவும் இடம்பெறவுள்ளன.