You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பக்தர்கள் பல வேடம் தாங்கி அம்மனை வழிபடும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

2018-08-19


உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்ற தசரா திருவிழா இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தி சிறத்தையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
இவ் திருவிழாவானது இந்த வருடம் அக்டோபர் மாதம் 10-ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

 


தசரா விரதம். 

இந்தியாவின் பல பிரதேசங்களில் உள்ள பக்தர்கள் விரதத்தை தொடங்குவதற்காக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஒன்று கூடி சிவப்பு நிற ஆடை அணிந்து, கடலில் புனித நீராடி அம்மனை வழிபடுவர். அதன் போது அம்மன் பாதத்தில் வைத்த துளசிமாலை கோவில் அர்ச்சகரால் பக்தர்களுக்கு அணிவிக்கப்படும். 


விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் குடில் அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவார்கள். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். 
இதனை தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்தினத்தில் மீண்டும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து அர்ச்சகரால் காப்பு கட்டிக் கொள்வர். 


காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக சிவன், பார்வதி, காளி, விநாயகர், முருகர், ராமர், லட்சுமணர், அனுமார், முனிவர், குறவன், குறத்தி, காவல்துறை, தாதி, சிங்கம், புலி, கரடி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூல் செய்து, இதனை விழாவின் இறுதி நாளில் நடைபெறும் சூரசம்ஹார நாளில் கோவிலில் வழங்கி வழிபடுவார்கள்.

 
இறை நம்பிக்கையுடனும் பக்தி சிரத்தையுடனும் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு மனம் குளிர்ந்து வேண்டும் வரங்களை அருளுகின்றாள் அன்னை.