You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
நிரந்தர செல்வமும் நிலையான நிம்மதியும் கிடைக்க அருளும் வரலட்சுமி பூஜை நாளை

2018-08-23


வரலட்சுமி பூஜை முறை 


வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டியும் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் பெண்களால் பக்தி சிரத்தையுடன் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் பெண்களால் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும்.


இந்த விரதமானது பண்டைய காலம் தொட்டு  முன்னோர்வழி எமக்கு வந்த மிகச்சிறப்பு மிக்க வழிபாடாகும். வரலட்சுமி  விரதத்தை முறையாக அனுஷ்டித்து அன்னையின் அருள் பெற்றமை பற்றி புராணக்கதைகள் உள்ளன. 


வரலட்சுமி புராணக் கதைகள்


சிவனும் பார்வதி தேவியும் பகடை விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது யார் வெற்றி பெற்றது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் நேர்மையான பிராமணர் சித்ராநேமியை தீர்ப்பு சொல்லும் படி வினவினர். அவர் கடவுள் சிவ பெருமான் வெற்றி பெற்றதாக சொல்லி விட்டார். இதனால் கோபமடைந்த பார்வதி அவருக்கு தொழு நோய் கொடுத்து சாபம் அளித்து விட்டார் அன்னை பார்வதியின் சாபத்திற்கு ஆளான சித்ரநேமி அப்சரஸ் பெண்கள் கடைபிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார். 


பூவுலகில் சௌராஷ்டிரா நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைபிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைபிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

வரலட்சுமி பூஜை வழிபாட்டு முறை
வரலட்சுமி பூஜை வீட்டில் செய்யகூடிய சிறப்பு பூஜையாகும். வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை தூய்மைப படுத்தி , கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். 
மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும்.


கலச கும்பம் அமையவேண்டிய முறை
அரிசி, 8 எலுமிச்சை, 8 பொற்காசு அல்லது காதோலை கருமணி  , 8 காசுகள், 8 பாக்கு ஆகியவற்றை அஷ்டலக்சுமிகளையும் மனதில் இருத்தி  கும்பத்தில் நிரப்புதல் வேண்டும்.


கும்பத்தின் வாயினை 7 மாவிலைகளையும்  தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றுதல் வேண்டும்.  தங்கம் , வெள்ளி  அல்லது ஐம்பொன்னினால் ஆன மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை கும்பத்தின் மீது வைத்து பூக்கள் வைத்து அலங்கரிக்கவேண்டும்.
அதன் மீது 8 முடிகள் கொண்ட மஞ்சள் சரடு கயிற்றை வைத்தல் வேண்டும்.


பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கது பூஜை செய்பவர் வலது புறமாக இருந்து பூஜை செய்ய ஆறம்பிக்கவேண்டும். சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை  நிவேதனம் செய்யது  ஐந்து முக விளக்கை ஏற்றி விக்னேஸ்வரரை வணங்கி பூஜையை தொடங்க வேண்டும்.


“எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயாக”என்று போற்றி மனம் உருகி அஷ்டலக்சுமிக்குறிய பாடல்களை பாடி பூஜித்தல் சிறப்பு தரும்.  


பூஜை முடிவில் மஞ்சள் சரடு கயிற்றை கையில் கட்டுதல் வேண்டும்.
மறுநாள் காலை வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக்  பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.


இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.