You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவை எட்டியது.

2018-08-26


இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் ரந்தோலி பெரஹர  கடந்த (21.08.2018 ) செவ்வாய்கிழமை அன்று ஆறம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் பெருவிழாவாக பெரஹராவின் வீதி உலா இடம்பெற்றது .


 புத்த பெருமானின் புனித பொருட்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த பெரஹராவில்  10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டி நகருக்கு வருகை தந்து புத்த பெருமானின் புனித  சின்னங்களை வழிபட்டனர்.


கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் பகல் பவனி (26.08.2018) இன்று  இடம்பெறுகிறது. அதனைத்தொடர்ந்து கெற்றம்பே ஆற்றில் நீர்வெட்டு இடம்பெற உள்ளது.


எசல பெரஹராவின் 25.08.2018 அன்று இரவு இடம்பெற்ற  இறுதி ரந்தோலி பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.


இம்முறை எசல பெரஹரா வெற்றிகரமாக இடம்பெற்றது என எடுத்துக்காட்டும் குறிப்பேட்டை ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 26.08.2018 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளார். இந்த நிகழ்வின்போது பெரஹராவில் பங்கேற்ற கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் ஜனாதிபதி தலைமையில் வழங்கி வைக்கப்படும்.