You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சங்கடங்கள் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி இன்று

2018-08-29



அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். 
நாம் எந்தச் செயலை தொடங்கும் போதும் முதலில் எம்மை முன்னின்று காக்கும் விநாயகப் பெருமானை வழிப்பட்டே தொடங்குகின்றோம். உமது செயல்களில் ஏற்படும் அனைத்து தடைகளையும் உடைத்து எம்மை வெற்றிக்கு இட்டுச்செல்பவர் விநாயகர் எனவே தான் எல்லா வழிபாட்டின் போதும் பிள்ளையாருக்கு முதலில் பூஜை இடம்பெறுகின்றது. 


நாம் விநாயகரை விசேடமாக விரதமிருந்து வழிபடும் நாட்களாக வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை விரதங்கள் விளங்குகின்றன. மேலும் ஒவ்வொருமாதமும் சதுர்த்தி திதி பிள்ளையாரின் விசேட வழிபாட்டு நாளாகும். இதில் சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது. சங்கடம் என்றால் தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று பொருள் ஹர என்றால் நீக்குவது என்று பொருள் எனவே சங்கடங்களை நீக்க வேண்டி இன்றைய தினம் விரதம் அனுஷ்டிக்கின்றோம். 


விநாயக சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன் வரும் தேய்பிறை சதுர்த்தி நாள் மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த விரதத்தினை ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது சிறந்த நற்பலன்களை தரும். 
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் பக்தியுடன் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும். 


சங்கடஹர சதுர்த்தி பற்றி பல புராண கதைகள் உள்ளன அதில் ஒன்று ஸ்ரீ கிருஷ்ணர் பற்றியது, ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. அதை நீக்க வேண்டி ஶ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பூஜை செய்தார். 


விநாயகர் அவருடைய அவப்பெயர் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது. 
சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. 
(கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) 

சங்கட ஹர சதுர்த்தி விரத முறை 
சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் நீராடி உபவாசம் இருந்து விநாயகரை வணங்கி சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 
பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.


ஸ்ரீ விநாயகாஷ்டகம்


ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I 
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I 
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I 
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I 
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I 
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I 
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I 
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I 
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II

இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை பக்தியுடன் வணங்கி வழிபட சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வழம் பெறலாம்.