You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணரின் நினைவு நாள் இன்று

2018-08-30


தமிழ் சினிமாவில் என்றுமே நகைச்சுவை நடிகர்களுக்குத் தனி ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தைதக்கவைத்துக் கொண்ட  பிரபலங்களில் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டைக் கடந்து  வாழும் கலைவாணர் ஆவார். 


1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் நாள்  நாகர்கோவில்  அருகே  உள்ள  ஒழுகினசேரி  கிராமத்தில்சுடலைமுத்துப் 

பிள்ளைக்கும்  இசக்கி  அம்மாளுக்கும்  மகனான பிறந்தார்.  நாகர்கோவில்  சுடலைமுத்துகிருஷ்ணன் என்பதன் 

சுருக்கமே என்.எஸ்.கே என  ரசிகர்களால் அழைக்கப்பட்டார். 


நான்காம் வகுப்புவரை மட்டுமே பாடசாலை கல்வி பயின்ற இவர் குடும்ப வருமை காரணமாக நாடகக்கொட்டகையில் 

சோடா விற்கத் தொடங்கினார். அங்கு அரங்கேறிய நாகங்களில் ஆர்வம் ஏற்படவே அந்தஅறிவை கொண்டு 'சதிலீலாவதி' 

எனும் தனது முதலாவது தொடரை எழுதினார். எனினும் அவர்இரண்டாவதாக நடித்த 'மேனகா' படத்தைத் தொடர்ந்தே

 'சதிலீலாவதி' திரைக்கு வந்தது. 
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். 
நகைச்சுவையை பாடல் வடிவில்  அமைத்து  தமது புதிய  முயற்சியால்  ரசிகர்களுக்கு  விருந்து படைத்தவர்கலைவாணர்

  150 படங்களுக்கு  மேல் நடித்துள்ள  இவர் தமது சொந்த  குரலில் பல  பாடல்களையும்பாடியுள்ளார். 


தனது நகைச்சுவை பிறர் மனதைப் புண்படுத்திவிட கூடாது என்பதில் மிகுந்த கவணமிக்கவர். இவருடையகிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற படைப்புகளின் மூலம்பழங்கலைகளின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை அறியலாம். 


அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் என்எஸ்கே . தமதுதிரைப்படங்களில்

 சீர்திருத்தக் கருத்துக்களை துணிவோடு எடுத்துக் கூறியவர். அறிவியல் முன்னேற்றம்பற்றியும் பாடியவர். 

கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும்ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். 


தமிழ்நாடு அரசு இவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் எனபெயர் சூட்டியுள்ளது. 
1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி தனது 49ஆவது வயதில் கலைவாணர் இந்த மண்ணுலகை விட்டுமறைந்தார்.