You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




1,360 ஏக்கர் நிலப்பரப்பில் தனி மனிதர் உருவாக்கிய காடு

2018-09-02


இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 1979ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அழிவுக்குள்ளான எந்தவிதமான தாவரங்களும் வளரும் சாத்தியமற்ற  பிரம்மபுத்திரா நதியின் மணற்பரப்பை நிழல்தரு சோலையாக மாற்ற எண்ணினார் யாதவ் பாயேங் என்ற இளைஞர்.
அந்த வெள்ளத்தின் போது பல்லாயிரம் கணக்கான உயிரிணங்களும் இயற்கை வளங்களும் அழிவுற்றன. அவற்றை கண்டு மனம் வருந்திய யாதவ் பாயேங் தனி மனிதராக ஒரு காட்டையே உருவாக்க எண்ணினார்.

 


 ஆரம்பத்தில் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க  மூங்கில் பற்றைகளை  நதி க்கரையில்  வளர்க்க ஆரம்பித்தார், அதன் கழிவுகள் மூலம் அம்மண்ணை வளப்படுத்தி, ஏறத்தாழ 1,360 ஏக்கர் நிலப்பரப்பில், தனியொரு ஆளாக, ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார். 
தனது 16 வயதில் தொடங்கிய இந்தபணியை 30 வருடங்கள் தொடர்ந்து முயற்சித்து ஒரு சிறந்த வனபூமியை உருவாக்கி உள்ளார் இவர்.


இந்த காட்டில் ஒரு குடிசையில் மின்சாரம், குடிநீர் வசதிகளுமின்றி, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இவர் தான் வளர்க்கும் ஆடுமாடுகளின் பாலை விற்பதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்கின்றார்.


இதில் என்ன  ஆச்சரியம் என்றால் 2008 வரை இந்த காடு இனங்காணப்படாமலேயே இருந்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த 115 யானைகளைத் தேடிடும் போதே பதிவுகளில் இல்லாத இந்த காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரங்களே வளரும் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட இடத்தில், இன்று, பலவகையான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் வாழ்கின்றன.

 


ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல், எந்தவித வெளி ஊக்கமும் இல்லாமல், பொருளாதார பின்னணியும் இன்றி இவர் செய்த சேவையையும் சாதனையையும் பாராட்டி,  இந்திய அரசு 2015ம் ஆண்டு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.