You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சித்த மருத்துவத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் - அகத்தியன் அவிழ்தம்

2018-09-11


எமது முன்னோர் வழி எமக்கு வந்த மருத்துவ விந்தை சித்த மருத்துவமாகும். எந்த ஒரு நோய்க்கும் இயற்கையுடன் இனைந்து முழுமையான குணத்தினை சித்தமருத்துவம் தருகின்றது.
இருப்பினும் எமது இலகு கருதி இன்று நவீன மருத்துவ முறையையே முழுமையாக நம்பி உள்ளோம். இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் பணச்செலவுகளும் ஏராளம்.


 அழிவை நோக்கிச் செல்லும் சித்த பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில்  சித்த மருத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் வடக்கு மாகாணத்தில் சித்த மருத்துவத்தின் வளர்ச்சியும்,அடைவுகளும் தொடர்பாக தயாரிக்கப்பட்ட 'அகத்தியன் அவிழ்தம்' ஆவணப்படம் வெளியீட்டு விழாவும் பாராட்டு நிகழ்வும் நேற்று   (10-09-2018) திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் பொது நூலக கோட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


இவ் விழாவில் பிரதம விருந்தினராக  கலந்து கொண்டு உரையாற்றிய  வடமாகாண சுகாதார  அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி கீழ்வருமாறு தெரிவித்தார்.


"பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து மறைந்து கொண்டிருப்பதோடு,பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்தும் மற்றும் தூயத்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து செல்லுகின்றது. எனவே அவற்றை கட்டிக் காக்க அனைவரும் முன் வர வேண்டும்" 


மேலும் இவ் நிகழ்வில் பலர் கௌரவிக்கப்பட்டதுடன் மருத்துவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.