2018-09-12
விநாயக சதுர்த்திக்காக அனைவரும் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கின்றனர். சதுர்த்திக்கான விநாயகரை தெரிவு செய்யும் போது அதில் பல முக்கிய விடயங்களை கருத்தில் கெள்ளுதல் வேண்டும்.
நாம் வாங்கும் சிலைகள் நமது பணவசதிக்கு ஏற்றால் போல் இருந்தால் போதும் பெருமைக்காக கடன் பட வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று பிள்ளையார் சிலையின் நிறம், வடிவம், தும்பிக்கை இருக்கும் திசை, மற்றும் சிலை செய்யப்பட்டுள்ள பொருள் என்பவற்றை தெரிவுசெய்து வாங்கி சரியான முறையில் பக்தியுடன் பூஜை செய்வதால் இறைவன் மனம் மகிழ்ந்து எமக்கு அருள் தருவார்.
சிலை செய்யப்பட்டுள்ள பொருள்
விநாயக சதுர்த்திக்காக வைக்கப்படும் பிள்ளையார் நீரில் கரையும் இயல்புடையதாக இருக்தல் சிறப்பான விடயமாகும். எனவே தான் களிமண்ணால் செய்தத பிள்ளையார் மிகச்சிறப்பு உடையவர். எனினும் இப்போது நிறைய இராசாயண கலவைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின்றன. இதனால் சூழல் மாவு ஏற்படும் எனவே இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக் கூடாது. ஏன் நமது வீட்டு பூஜையறையிலும் கூட அதை வைத்திருக்கக் கூடாது.
பிள்ளையாரின் நிறம்
சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். இவ் வண்ணங்கள் உங்கள் வீட்டுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியை கவரும் ஆற்றலையும் கொடுக்கும்.
பிள்ளையார் சிலையின் வடிவம்
நிற்கும் நிலை பிள்ளையார்
வீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் படி வாங்குங்கள். அதுதான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடமென்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள்.
அமர்ந்திருக்கும் பிள்ளையார்
அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால், செல்வ வளம், பொருளாதாரம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரயச் செலவுகள் குறையும். நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால், தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
தும்பிக்கை இருக்கும் திசை
சிறிய பிள்ளையார் சிலையில் பெரும்பாலும் நடுநிலையாகக் கூட தும்பிக்கை அமைந்திருக்கலாம். . அப்படி இருப்பதை வாங்கக் கூடாது. இடதுபுறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தான் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால் இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குதல் வேண்டும்