You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




144 ஆண்டுகளின் பின்பு தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா! ஆனந்த கூத்தாடும் பக்தர்கள்

2018-10-11



குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் வாசம் செய்யும் ராசிக்கு உறிய புனித நதியில் இடம்பெரும் பெருவிழா புஷ்கர திருவிழா! இவ்வருடம் புனித நதிகளில் ஒன்றான தாமிரபரணியில் மகாபுஷ்கர திருவிழா இன்று முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இம்முறை குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருட்சக ராசிக்கு இடம்பெயகின்றார்.  144 ஆண்டுகளின் பின்பு விருட்சக ராசிக்குறிய நதியான தாமிரபரணியில் விழா நடைபெருகின்றது. இதனால் இவ் விழா மகாபுஷ்கர விழா என அழைக்கப்படுகின்றது.


தாமிரபரணி சமவெளியில் தொடங்கும் பாபநாசம் முதல் கடலில் சேரும் குன்னக்காயல் வரையிலான 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 144 படித்துறைகளிலும் அதிகாலையிலேயே விழா தொடங்கியுள்ளது. இந்நாட்களில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடுவோர்க்கு புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.