You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கந்தசஷ்டி விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

2018-11-08


கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானை நினைத்து பக்தர்களினால் ஆறு நாட்கள் நோற்கப்படும் விரதமாகும். இன்று கந்தசஷ்டி விரதத்தின் முதல் நாள் ஆகும்.

கந்தசஷ்டி விரதத்தின்  போது பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் 
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது சிறந்தது.
காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். 
 கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.


ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். எப்போதும் முருகனின் சிந்தனையில் மனதை இருத்துங்கள். 
சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.


ஆறாம் நாள் முருகனின் சூரசம்ஹார கோலத்தை தரிசித்துவிட்டு அன்றே நீராடுதல் வேண்டும்.


மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்த பின் ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை உட்கொண்டோ அல்லது வீட்டில் சமைத்த உணவை உட்கொண்டோ விரதத்தை நிறைவு செய்யலாம்.

 

கந்தசஷ்டி விரத பூஜை


கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாள் சூரசம்ஹார தினமாகும் இன்றைய தினத்தில் மிக எளிமையான முறையில் முருகனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் எழுந்தருள செய்து பூஜிக்கலாாம்.
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நெற்றிக்குவிபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அலங்கரியுங்கள்.  பூஜை அறையில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார வேண்டி கொண்டு, சஷ்டி விரத பூஜையை நிறைவாக செய்ய துணை நிற்கும்படி விநாயகப்பெருமானை பூஜித்து வேண்டிக்கொள்க. அடுத்து, முருகன் படம் அல்லது முருகன் விக்ரகத்திற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரித்து பூஜையில் எழுந்தருளும்படி வேண்டி கொண்டு  பூஜைக்காக அலங்கரித்த இடத்தில் முருகப்பெருமானை வைத்து தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். 


ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றால் பூஜை செய்து மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டிகவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் பாடுங்கள். இயலாதவர்கள் கந்தா சரணம், முருகாசரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச்சொல்லுங்கள். 


நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.


அன்று மாலை, முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹாரம்  இடம் பெரும் முருகனின் சூரசம்ஹாரம்  கோலத்தை தரிசனம் செய்துவிட்டு அன்று இரவே நீராடுதல் அவசியம். 
மெய்யன்போடு முருகனை வேண்டி கந்தசஷ்டி விரதத்தினை அனுஷ்டிப்பவருக்கு வேலவன் அருளால் அனைத்து பக்கியமும் கிடைக்கப்பெரும். முருகன் அருள் எப்போதும் துணை நிற்கும்.