You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்றைய ராசிப்பலன் 05-12-2018

2018-12-05


மேஷம்


இன்று நீங்கள் உழைப்பால் உயர்வு அடையும் நாள். உறவுகளின் உதவியும் உங்கள் புக்தி சாதுரியமும் உங்ளை மேலும் உயர்த்தும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிறைவான இனியா நாள் இது உங்களுக்கு.

ரிஷபம்


இன்று உங்களுக்கு சுபமான நாள் எனவே சுபசெலவுகள் உண்டாகும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் ஊக்கம் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சாவால்களை துணிவுடன் எதிர் கொள்ளுங்கள் வெற்றி உங்களுக்கே.


மிதுனம்


இன்று உங்களுக்கு உடல்நிலையில் சோர்வு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மை தரும். செலவுகளை பார்த்து செய்வதால் வீண்செலவுகளை தவிர்க்கலாம். உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சற்று கடிமான நாள் எனினும் உங்கள் பொருமையும் கவனவும் இன்நாளையும் நன்நாளாக மாற்றும்.


கடகம்


இன்று மனதின் கவளைகளை மறந்து மகிழ்ச்சி அடையும் நாள். புதியவர்களின் அறிமுகத்தினால் நன்மை அடைவீர்கள். உங்கள் மனதின் தெளிவும் சுறுசுறுப்பும் வெற்றியை தேடித்தரும். சிலருக்கு கொடுக்கல் வாங்களில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

 
சிம்மம்


இன்று உங்களை நீங்கள் உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் சுறுசுறுப்பின்மையினால் சுப காரியங்களில் தாமத நிலை ஏற்படலாம். உறவுகளிடம் கணிவாக நடந்த கொள்ளுதல் பிரச்சினைகளை குறைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் முயற்சியினால் வெற்றி பெறலாம். நண்பர்களை அனுசரித்து போவது நன்மை தரும்.

கன்னி


இன்று உங்கள் வாழ்வில் சில சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இழப்பு ஏற்படலாம் ஆனால் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவது தேவையில்லாத கடனை  குறைக்கும். இறை வழிபாட்டில் மனதை செலுத்துங்கள் கவளை வேண்டாம் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.


துலாம்


இன்று மகிழ்ச்சியான நிகழ்வுகளினால் நீங்கள்  மகிழ்வு அடைவீர்கள். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் நண்பர்களுடன்  ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உங்கள் உழைப்பின் பயனாக புதிய சொத்துகள் சேரும். குடும்ப உறுப்பினர்களால் மனமகிழ்வு ஏற்படும். 


விருச்சிகம்


இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். பொருப்புடன் செயற்படுவதால் பாதிப்புகளை குறைக்கலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.


தனுசு


இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.


மகரம்


இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.


கும்பம்


இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியால் எளிதில் செய்து முடிக்க முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.


மீனம்

செயல் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் குடும்பச் செலவுகளுக்கு பயன்படும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்றவும்.