You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலகின் மிகப்பெரிய பனி சிற்ப திருவிழா - மெய்சிலிர்க்கும் அனுபவம்

2019-01-07


உலகின் மிகப்பெரிய பனி சிற்ப திருவிழா சீனாவின் ஹர்பின் நகரில் வாணவேடிக்கைகளுடன் 5ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.

மிகவும் குறைவான வெப்பநிலையை கொண்டிருக்கும் சீனாவின் குளிரான நகரங்களில் பழமையான ஹர்பின் நகரமும்  ஒன்றாகும். 1983 ஆம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் இங்கு பனித்திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. 

 


 இதற்காக பனி உறைந்து போயிருக்கும் Soungha ஆற்றில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பனி சிற்பங்கள் உருவாக்கப்பட்டு  அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதிகளவான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ள  இவ் பனித்திருவிழா எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 


இவ் திருவிழாவில்  நடை பெற்றுவரும் பனிசிற்ப போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்று உள்ளதுடன் மைனஸ் 10 டிகிரி குளிர் உள்ள நிலையில் 64 போட்டியாளர்கள் தங்களின் கைத்திறமையையும், கற்பனை வளத்தையும் காட்டி வருகின்றனர்.  இந் நிகழ்வில் இறுதி நாளில் சிறந்த சிற்பத்திற்கான பரிசுகளும் அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.


பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும்  வகையில்  பல்வேறு பனிச் சிற்பங்கள் சிற்பிகளால் வடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரை உறையவைக்கும் பனிக்குளத்தில் நீச்சல் போட்டியும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.