2019-02-10
மேடம்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் கொண்ட மேடராசி அன்பர்களுக்கு எதிர்பார்ப்புகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் சார்ந்த முன்னேற்றம் அமையும். குடும்ப நிலையில் மகிழ்வும் சுப பலன்களும் ஏற்படும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உரிய வழி அமையும். பெண்களுக்கு மகிழ்வான நிலை, மாணவர்களுக்கு சிறப்பு நிலை. அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 10.
இடபம்
கார்த்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ஆம் பாதம் கொண்ட இடபராசியினருக்கு சற்று மந்தமான பலன்கள் இருக்கும். காரியங்களில் இழுபறியான நிலை இருக்கும். குடும்ப நிலையில் சற்று சஞ்சலமான பலன் ஏற்படும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். பணவரவு சற்று மத்திமமாகவே அமையும் நிலை இருக்கும். கடன் நிலைகளில் இழுபறி நிலை இருக்கும். பெண்களுக்கு சஞ்சல நிலை. மாணவர்களுக்கு மந்த நிலை. அனுகூலமான நாள் வெள்ளி , நன்மையான திகதி 12.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 , 3 ஆம் பாதம் கொண்ட மிதுனராசியினருக்கு குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் அமையும். தொழில் நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும். உறவினர்களின் மூலமாக உதவிகள் கிடைக்கும். பணவரவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலை இருக்கும். கடன் நிலைகளில் ஓரளவிற்கு அனுகூலமிருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு மத்திம பலன், அனுகூலமான நாள் புதன், நன்மையான திகதி 16.
கடகம்
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் கொண்ட கடகராசியினருக்கு மனச்சஞ்சல நிலை அதிகமாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் நிலைகள் காரியத்தடைகள் அமையும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் நிலையிருக்கும். பணவரவு சற்று மத்திமமாகவே அமையும் நிலையிருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு சிரமங்கள் ஏற்படும். உடல் நிலை சார்ந்த சிறு சிறு சகயீனம் இருக்கும். பெண்களுக்கு சஞ்சல நிலை, மாணவர்களுக்கு முயற்சி தேவை. அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 11.
சிம்மம்
மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம் கொண்ட சிம்மராசி அன்பர்களுக்கு. தொழில் சார்ந்த மேன்மைகள் இருக்கும். குடும்ப நிலையில் மகிழ்வும் சுப அனுகூலமும் இருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் இருக்கும். தொழில் சார்ந்த திடீர் பிரயாணங்கள் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் இருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு. அனுகூலமான நாள் ஞாயிறு , நன்மையான திகதி 16.
கன்னி
உத்தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1,2 ஆம் பாதம் கொண்ட கன்னி ராசியினருக்கு சற்று மத்திமமான சுமாரான பலன்களே அமையும். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை தாமத நிலைகள் அமைந்திருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். பணவரவு சற்று மத்திமமாகவே அமையும். தாயார் வழியில் சற்றுச் செலவீனங்கள் இருக்கும் . பெண்களுக்கு மத்திம பலன் , மாணவர்களுக்கு சிறப்பு நிலை. அனுகூலமான நாள் புதன், நன்மையான திகதி 14.
துலாம்
சித்திரை 3 ,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2, 3 ஆம் பாதம் கொண்ட துலாராசியினருக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன் இருக்கும். தொழில் நிலையில் வேலைப்பளு இருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு சஞ்சலம் அமையும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமைகின்ற நிலை இருக்கும். சகோதரர்களுடன் சிறு சிறு சஞ்சல நிலையிருக்கும். கடன் நிலைகளில் இழுபறியான பலன் அமையும். பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு முயற்சி தேவை, அனுகூலமான நாள் வெள்ளி. நன்மையான திகதி 15
விருச்சிகம்
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை கொண்ட விருச்சிக ராசியினருக்கு தொழில் சார்ந்த சிறப்பு இருக்கும். குடும்ப நிலையில் நன்மையும் மகிழ்வும் இருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் அமையும். எதிர்பாராத திடீர் பிரயாணங்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு, அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 14.
தனுசு
மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம் கொண்ட தனுசுராசியினருக்கு சற்று மந்தமான பலாபலனே இருக்கும். தொழில் நிலையில் சிக்கல் நிலைகள் அமையும். பணவரவு சற்று மத்திமமான பலனே இருக்கும். கடன் நிலைகளில் சற்று சிக்கல் நிலையிருக்கும் உடல் நிலை சார்ந்த சிறு சிறு சுகயீனம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் நிலை அதிகமாக இருக்கும். பெண்களுக்கு சஞ்சல நிலை, மாணவர்களுக்கு மந்த நிலை, அனுகூலமான நாள் வியாழன், நன்மையான திகதி 12.
மகரம்
உத்தராடம் 2,3,4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் கொண்ட மகர ராசியினருக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும். நிலையுண்டு. தொழில் நிலையில் இலாபங்கள் அமைய இடமுண்டு. பணவரவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலன் உண்டு. எதிர்பாராத செலவீனங்கள் அமையும். குடும்ப நிலையில் நன்மையான பலன்கள் இருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு முயற்சி தேவை அனுகூலமான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 13.
கும்பம்
அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம் கொண்ட
கும்பராசியினருக்கு குடும்ப நிலையிலே எதிர்பாராத நன்மைகளும் மகிழ்வும் இருக்கும். தொழில் சார்ந்த மேன்மைகள் அமைகின்ற நிலையுண்டு. பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலன் இருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும். பெண்களுக்கு அனுகூலநிலை, மாணவர்களுக்கு சிறப்பு நிலை. அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 15.
மீனம்
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி கொண்ட மீனராசியினருக்கு சற்று அலைச்சல் நிலை இருக்கும். தொழில் சார்ந்த திடீர் பிரயாணங்கள் அமையும். குடும்ப நிலையில் சிறுசிறு மந்தநிலை அமையும். பணவரவு சற்று மத்திமமாகவே இருக்கும். தேவையற்ற சிறுசிறு பிரச்சினைகள் வந்துசேரும். கடன் நிலைகளில் இழுபறிகள் தொடரும். பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு முயற்சி தேவை. அனுகூலமான நாள் வியாழன், நன்மையான திகதி 12.
- துன்னையூர் ராம்.
தேவலோகேஸ்வர குருக்கள்