You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் மேல்மருவத்தூர் ‘அம்மா’

2019-03-11


இந்தியாவின் மிக உயரிய விருகளில் ஒன்றான  பத்மஸ்ரீ  விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் தற்போத நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மேல்மருவத்தூர் சித்தர் பீட ஆன்மீக குருவான பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி பக்தர்கள்  கருவறைக்குச் சென்று கண்குளிர அம்மனை தரிசிக்கும் பேறு நல்கும்  ஆலயம் இந்தியாவின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் ஆகும்.​ 

மேல்மருவத்தூர் சித்தர் பீட ஆன்மீக குருவான பங்காரு அடிகளார் பக்தர்களால்  ‘அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படுகின்றார். மேல்மருவத்தூர் ஆலயம் மற்றும் ஆதிபராசக்தி அம்மன் ஸ்தாபகராக விளங்கும் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்னும் பல கலஞர்கள் உட்பட பலருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.