You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




விகாரி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!

2019-04-14


மேஷம் ராசி
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக செல்லும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். சொத்து மற்றும் ஆபரணச் சேர்க்கை இருக்கும். மருத்துவம், ராணுவம் காவல்துறை போன்ற இடங்களில் வேலையில் இருப்போர் பாராட்டப்படுவர். தகவல் தொழில்நுட்பத் துறை யினருக்கு வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபத்தை சம்பாதிக்கும் காலம் இது. மாணவர்களுக்கு மிக முன்னேற்றமான காலமாக இருக்கும். 

ரிஷபம் ராசி
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் சிறுசிறு சச்சரவுகளுக்கு பின் அமைதி கிடைக்கும். ஒற்றுமை வரும் கடன்பட்டு சுப நிகழ்ச்சிகளை குடும்பத்தில் நடத்த வேண்டி வரலாம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைத்துறையினர் மிகுந்த புகழை பெறும் காலம் என்றாலும் புகழ் அடையும் அளவிற்கு போதிய வருமானம் இருப்பது கடினமே. சேமிப்பு குறைந்து கடன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. 


மிதுனம் ராசி
கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும். குழந்தைகளுக்கான சுபகாரியங்கள் சற்று சிரமத்தின் பேரில் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல் வாதிகளுக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினமான ஒன்று. நல்ல முறையில் வேலை செய்தாலும், நல்ல பெயர் எடுப்பதற்கு மிகுந்த தடைகள் ஏற்படும். இரும்பு, வாகனம், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு தன்னுடைய தொழிலில் மிகுந்த கவனம் தேவை. 
இருப்பினும், கடின முயற்சிக்குப் பின் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. அரசுத் துறையில் ஒரு சில ஆதாயங்கள் கிடைத்தாலும் அவைகளுக்காக போராட வேண்டி வரும். தகவல் தொழில்நுட்பத் துறை மருத்துவத் துறை காவல் துறை போன்றவற்றில் இருப்பவர்கள் தற்பொழுது இடமாற்றம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் சற்று கால தாமதமாக வாய்ப்புண்டு! 

கடகம் ராசி 
கணவன் மனைவி உறவு மிகவும் இனிமையாக செல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், சந்தோஷமும் உண்டு. வாகனத் துறை இரும்பு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தொழில் முன்னேற்றம் கண்டு சொத்து அல்லது ஆபரணச் சேர்க்கை வாங்கும் காலமாக அமையும். இறைவனின் கிருபா கடாட்சம் முழுமையாக கிடைக்கும். 
மாணவர்களுடைய கல்வி மேம்படும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலம். பதவி உயர்வுகள், உத்தியோக உயர்வுகள் போன்றவை காலம் களித்து வரும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலையும், விலையையும் பெற்றுத்தரும் காலமாகும். 

சிம்மம் ராசி 
கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். உடல் நலன் சீராக இருக்கும். பெரிய அளவில் எதுவும் சேமிக்க இயலாது. ஆன்மீக காரியங்களிலும் தெய்வீக திருப்பணிகளிலும் பங்கேற்று சிறப்பிக்கும் காலம் இது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பொருளாதாரத்தில் செலவினங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம் இது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெயரையும் புகழையும் கொடுத்தாலும் வருமானத்தை அதற்குச் சமமான அளவில் அள்ளித் தரப் போவது இல்லை. 


கன்னி ராசி 
கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருந்து வரும். குழந்தைகளால் பேரும், புகழும், மன நிம்மதியும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவர். அரசு மற்றும் தனியார் துறையில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கப்பெறும் காலமாகும். தன லாபமும், பூமி லாபமும் கொடுக்கும் காலம். புது வீடு கட்டுவது புது தொழில் ஆரம்பிப்பது என்று வாழ்க்கையில் ஏற்றத்தைத் தரும் காலம் ஆகும். 


துலாம் ராசி 
கணவன் மனைவி உறவு மிகவும் அன்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் சுபகாரியங்கள் நடைபெறும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சேமிப்பு சிறப்பாக உயரும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும். விபாரிகளுக்கும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் தனலாபம் கிடைக்கும். கட்டிடப் பொருட்கள் மற்றும் இரும்பு துறை வேலை அல்லது வியாபாரம் என்று இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும் காலம் ஆகும். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தி விடுவார்கள். 

விருச்சிகம் ராசி 
கணவன் மனைவியிடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் ஒற்றுமை ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை ஒரு சிலருக்கு கடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு சொத்துக்களின் பேரில் கடன் பெறுவது அல்லது நகைக்கடன் பெறுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது பதவி உயர்விற்காக மேலும் சில காலம் காத்திருக்க வேண்டி வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. பங்கு வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்களுடைய முதலீடுகளை குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. 
விநாயகப் பெருமான் வழிபாடு நல்ல ஆக்கம் தரும். மொத்தத்தில் ஒரு சில விஷயங்களில் மன அழுத்தத்தை கொடுத்தாலும், இறுதியில் வெற்றியே கிடைக்கும். 

தனுசு ராசி 
கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. சொத்து சேர்க்கை மற்றும் ஆபரண சேர்க்கை கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்து வரும். வேலைவாய்ப்பு துறையில் இருப்பவர்களுக்கு பட்டங்களும், பதவி உயர்வும், பாராட்டுக்களும் கிடைக்கப் பெறுவார்கள். 


மகரம் ராசி 
கணவன் மனைவி உறவு நன்றாகவே இருந்து வரும். மாணவர்கள் கடின உழைப்பை போட்டால் தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். வரம், வியாபாரிகள் முன்னேற்றம் பெறுவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவீனங்கள் கூடும். உடல் நலம் சீராக இருந்துவரும் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் சேமிப்பு என்பது இருக்காது. தெய்வீக காரியங்களையும், ஆன்மீக காரியங்களிலும் ஈடுபட வாய்ப்புகள் வரும், பொருளாதாரத்தை சம்பாதித்தாலும் அவற்றை சேர்த்து வைக்க முடியாது. தொழில்துறையில் கூடுதல் கவனம் தேவை. 

கும்பம் ராசி 

கணவன் மனைவி உறவு ஒரு சில பிரச்சினைகளுக்கு பெண் சீராக இருந்து வரும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரிய நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு புதிதாக கடன் பட நேரும். கையிருப்பு காலியாக வாய்ப்புண்டு. மாணவர்கள் குறிப்பாக உயர் கல்வி பயிலக்கூடிய மாணவர்கள் கூடுதலான கவனம் எடுத்து படிக்க வேண்டும். புது தொழில் முயற்சிகள் இந்த வருடம் தவிர்ப்பது நலம். வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

மீனம் ராசி 

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.  மாணவர்கள் கூடுதலான முயற்சியை போட்டுத்தான் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சொந்தத் தொழில் ஆரம்பிப்பதை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.