You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மதுரை நகரினை திருவிழா நகராக மாற்றும் சித்திரைத்திருவிழா கோலாகலம்

2019-04-18


தமிழ் வருடத்தின் முதல் மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும், மீனாட்சி பட்டாபிஷேகமும் மதுரையில்  நடைபொரும் இரு பெருவிழாக்களாகும்.  மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறும்   சித்திரை திருவிழா மிக கோலாகமானது. இதற்காக இந்தியாவின் பல மாணிலங்களில் இருந்து பக்தர்கள் கூடி மதுரை நகரினை திருவிழா நகராக மாற்றி விடுகின்றனர். பண்டைய  காலங்களில் மாசித் திருவிழா  கொண்டாடப்பட்ட விழா திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சித்திரைக்கு மாற்றப்பட்டது.


சித்திரை திருவிழா கோலாகலம்
பொருட்காட்சி, திருக்கல்யாணம், தேரோட்டம் என இவ் விழாாவில் காண்டு மகிழ்வதற்கு காட்சிகள் ஏராளம்.


இம்மாதம் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான  இவ் பெருவிழாவின்  முதல் நாளில் மீனாட்சி அம்மனும், மீனாட்சி சுந்தரேசுவரரும் கற்பகவிருட்சக வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2-ம் நாள், பூத வாகனம் மற்றும் அன்ன வாகனத்திலும் வலம் வந்து காட்சி அளித்தனர். இவ்வாறு தினம் தினம் ஒவ்வொரு வாகனத்தில் நகர்வலம் செல்லும் காட்சி பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது.


சித்திரை திருவிழாவின் 8-ம் நாள் மதுரை நகரின் அரசிக்கு பட்டாபிஷேக விழா நடைபெருகின்றது. அன்றைய தினம் வைர கிரீடம் சூட்டி கையில் செங்கோலுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார் மீனாட்சி அம்மன். அதன் பின்பு இரவு வெள்ளி சிம்மாசனத்தில் பட்டத்தரசியாக தனது மக்களை காண ஊர்வளம் வரும் அம்பிகையின் அழகு காண்பவரை மெய்சிலிர்க்கச்செய்யும். 
ஒன்பதாம் நாள் அம்மனின் திக்குவிஜயம் நடைபெரும். இதன் போது இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும் அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் சண்டை இடும் நிகழ்வு சுவராஸ்யமாக இடம்பெற்றது.  சித்திரை திருவிழாவின் உச்ச கட்ட நிகழ்வான  மீனாட்சி அம்மனுக்கு சுந்தரரேசுவரருடன் திருக்கல்யாணம் 10 ஆம் நாள் நடைபெரும். அன்றைய தினம் பக்தர்கள்   புத்தாடை உடுத்தி  தங்கள் வீட்டு திருமணத்திற்கு செல்வது போன்று அன்னையின் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்.


திருக்கல்யாணம் முடிந்ததும்  திருமணமான பெண்கள் புது தாலி சரடு மாற்றிக்கொள்வதுடன் ஏராளமான பெண்கள் சுமங்கலிகளுக்கு புது மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொடுத்து மகிழ்ந்தனர். அதிருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி நடைபெரும். முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து  தம்பதி சமேதரராய் மீனாட்சி சொக்கநாதர் பூப்பல்லகில் எழுந்தருளினர்.


மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து மறுநாளான இன்று அதிகாலையில் திருத்தேரில் அமம்மனின்  ஊர்வலம் இடம்பெற்றது. அதிர்வேட்டு சத்தம், செண்டை மேளச் சத்தத்துடன், நாதஸ்வரம் மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்துச் செல்கின்றனர். தம்பதி சமேதரராக தேரில் வலம் வரும் காட்சியை பார்த்து விட்டு நீர்-மோர், பொங்கல், புளியோதரை என அன்னதானம் சாப்பிட்டு திருப்தியாக பக்தர்கள் வீடு திரும்புவார்கள்.

இந்த தேர் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் மதுரை வருகின்றனர். பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே ஆடி அசைந்து வரும் தேரை காண கோடி கண்கள் போதாது.