You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழரின் தொல்பொருள் வைப்பகம்

2019-06-11


அறிவுத்தேடலுடைய ஒரு தனிமனிதரின் அறிவுக்களஞ்சியம் உலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்த வரலாற்றுச்சின்னம் யாழ்நூலகம். 


1933 ஆம் ஆண்டில் கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவர் தமது  வீட்டில், சில நூல்களுடன்  நடத்திவந்த நூல் நிலையமே பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில் செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்குல் சில நூறு நூல்களுடன்  பொது நூலகமாக தமது பயணத்தை தொடங்கியது.


20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகமானது  தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகவே பேணப்பட்டு வந்தது. மீளப் பெற முடியாத அரிய நூல்களையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான ஏடுகளும் கூட அங்கு பாதுகாககப்பட்டு வந்தன. அன்றைய தமிழ் புலமையாளர்கள் சேர்ந்து உருவாக்கிய இவ் நூலகம் பின்னர் தான் மாநகர சபையினால் பொறுப்பேற்று  பராமரிக்கப்பட்டது.


நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. தமிழ் கலைகலாசாரத்தின் மிகப்பழமையான வரலாற்று ஆவணங்களை தாங்கிய யாழ் நூலகம் எரிக்கப்பட்மை அறிவுத் தேடலுடைய ஒவ்வொருவரின் மனதிலும் இன்றும் ஒரு இனம்புரியதா வலியையேற்படுத்துகின்றது.