You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இரு மடங்காக அதிகரித்துள்ள கதிர்காம யாத்திரியர்கள் பக்தர்களுக்கு நீர் பற்றாக்குறை

2019-07-10


வடகிழக்கு மற்றும் மத்திய மாகாண பகுதிகளில் இருந்து 26396 கதிர்காம யாத்திரிகள் 7ஆம் திகதி மாலை 3 மணிக்கு வடமேற்கு மாகாண ஓகந்தவில் உள்ள குமன தேசிய பூங்கா வழியாக உள்ளே வந்ததாக குமன தேசிய பூங்கா முகாமையாளர் சிசிரகுமார ரத்நாயக கூறினார்.


ஆவர் மேலும் கூறுகையில்,இம்முறை 1984ஆம் ஆண்டை விட இரு மடங்கு யாத்திரிகள் கதிர்காமம் நோக்கி மூன்று மாகாணங்களிலிருந்து குமன தேசிய பூங்கா வழியாக சென்றுள்ளனர் என தெரிவித்ததுடன் இவர்கள் ஓகந்த முருகன் ஆலயத்திற்கு வருகை தந்து அங்குள்ள முருகனை தரிசித்த பின்னர் குமன தேசிய பூங்கா வழியாக மி பாதுகாப்புடன் கதிர்காம கந்தனை வழிபட சென்றுள்ளனர்.


இம்முறை கதிர்காமம் நோக்கி சென்ற யாத்திரிகள் நலன் கருதி கடந்த மாதம் ஜீன் 27ஆம் திகதியன்று குமன தேசிய பூங்கா வழி கதவுகள் திறக்கப்பட்டதாக மஸ்கெலியா களனிவத்தை தோட்ட உரிமையாளர் முருகையாபிள்ளை பாலேந்திரன் கூறினார்.
ஆன்றைய தினத்தில் 3705 யாத்திரிகள் உள்ளே வந்ததாகவும்,மறுநாள் 8273 பேர் உள்ளே வந்ததாகவும் தெரிவித்ததுடன் அது கடந்த காலங்களை விட அதிகமானவர்கள் என பதிவாகியுள்ளது வன பாதுகாப்பு அதிகாரி சிசிரி குமார ரத்நாயக தெரிவித்தார்.


ஓகந்த முருகன் தேவாலய உற்சவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அங்கு அதிக அளவில் யாத்திரிகளின் வருகை காணப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், அவர்களுக்கான முதலுதவி செய்வதற்காக வைத்திய குழு அங்கு கடமையில் உள்ளனர்.அத்துடன் கதிர்காம யாத்திரை காலம் முடியும் வரை அங்கு மருத்துவ முகாம் நடக்கும் என்றும் அவர்களுக்கு குடிநீர் மற்றும் தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் உணவு போன்றவற்றை ஒரு குழு வழங்கி வருவதாகவும் அதற்கான உதவிகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர் எனறும் பாலேந்திரன் தெரிவித்தார்.


மேலும் 15000 பேர் வரை இவ் வழியை கடந்து கதிர்காமம் நோக்கி சென்றுள்ளதாகவும் இவ்வழியில் சென்ற யாத்திரிகள் அனைவரும் குமன பூங்கா வழியாக சென்றதாக இராணுவ அதிகாரி கே.டி.வி.ஜயசிங்க கூறினார்.அத்துடன் 10000 யாத்திரிகள் யால வன பூங்காவில் தங்கி சென்றவர்கள் எனவும்கடந்த முறை 21 நாட்கள் இவ்வழி திறந்திருந்த போதும் இம்முறை 14 தினங்கள் மட்டுமே திறந்து இருக்கும் என்றும் தெரிவித்தார்.


ஆகையால் 9ஆம் திகதி வரை யாத்திரிகள் இவ்வழியை பயன் படுத்த முடியும் என்றும் 10ஆம் திகதியன்று பாதுகாப்பு அரண் மூடப்படும் என தெரிவித்த அதிகாரி 9ஆம் திகதியன்று உள்ளே வரும் யாத்திரிகள் அனைவரும் 10,11,12 மற்றும் 13ஆம் திகதி வரை வன பகுதியில் இருக்கலாம் அதன் பின்னர் குமன பகுதியில் செல்ல முடியாது என யால வன பாதுகாப்பு உயர் அதிகாரி டி.பி.ஜயசிங்க தெரிவித்தார்.


மருத்துவ முகாம் மேற்கொண்ட வைத்திய குழுவும் இராணுவத்தினரும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் யாத்திரிகளுக்கு குடிநீர் வழங்கியதாகவும் அப்பகுதியில் கடும் வரட்சியான காலநிலை நிலவி வருவதால் இராணுவத்தினர் மற்றும் திருகோணமலை சிவ தொண்டர் அணியும் இணைந்து பவுசர்களின் மூலமாக யாத்திரிகளுக்கு நீர் வழங்கிய போதும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக களனிவத்தை தோட்ட முகாமையாளர் பாலேந்திரன் தெரிவித்தார்.

 


ஆகையால் இந்து கலாச்சார அமைச்சு அல்லது அகில இலங்கை இந்து மாமன்றம் முன்வந்து இப்பகுதிக்கு குமன வன பகுதியில் உள்ள முருகன் ஆலயத்திற்கு பவுசர் மற்றும் உளவு இயந்திரங்களை வழங்கி வைக்குமாறு யாத்திரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்