You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




யாழில் இயற்கைக்கு முதலிடம் வழங்கிய மஞ்சள் நீராட்டு விழா

2019-08-12


யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்கும் வகையில்  மஞ்சள் நீராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.


ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவினை தமிழர் பாரம்பரிய முறைப்படி இயற்கையுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.


தமிழர் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையானமுறையிலும் இயற்கைபொருட்களை பயன்படுத்தியும்  நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. 


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைவண்ணத்தில்  ஓலைகளை மட்டும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட  அலங்கார அரங்குக்குள் விழா நடைபெற்றுள்ளது. 

 


அத்துடன் இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் தேனீருக்கு பதிலாக இளநீர் பரிமாறப்பட்டதோடு உணவுகளும் மட்பாத்திரங்களில் வழங்கப்பட்டுள்ளது.


அனைவரும் ஆடம்பரங்களை விரும்பும் நிலையில் இவ்வாறு எளிமையாக நடத்தப்பட்ட மஞ்சள் நீராட்டு விழா பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆடம்பர கொண்டாட்டங்களின்  போதும் யாரும் இயற்கையை பற்றி சிந்திப்பதில்லை, பெரும் தொகையான பொலித்தீன்களை இயற்கையை மாசுப்படுத்தும் கழிவா சேர்க்கின்றனர். இவர்களின் இந்த செயற்பாடு அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.