You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நன்மைகள் பல நல்கும் நவராத்திரி விரதம்

2019-09-28


நவராத்திரி விரத நாட்களில் வீடுகளில் கொலு வைத்துஇ விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
 ஓன்பது நாள் விரத நாட்களில்  முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும்இ கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்கஇ நமக்குச்சொந்தமல்லாதஇ பிறர் வீட்டுக் குழந்தையை அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்.
பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டுஇ பாடல்கள் பாடிஇ அம்மனை வழிபட வேண்டும். 

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் கொலு வைக்கலாம். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். 

நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. இருக்கும் வசதிகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவேஇ கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. 

கொலு படிகளுக்கும் காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்துஇ மரமாகவும் பிறந்துஇ மனிதராகவும் பிறந்துஇ கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி பண்டிகையில் படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். 

ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். 

விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பாகவதம் சொல்கிறது. 

படி தத்துவம் 
கொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைக்கலாம் 

முதலாம் படியில்
முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல்,செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம். 

இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தைஇ சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான்இ எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். 

நான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டுஇவண்டு போன்றவற்றின் பொம்மைகள். 

ஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள்இ பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம். 

ஆறாம்படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள். 

ஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள்இ ரிசிகள்இ மகரிசிகள் போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம். 

எட்டாம்படியில் தேவர்கள்இ அஷ்டதிக்பாலர்கள்இ நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம். 

ஒன்பதாம்படியில் பிரம்மாஇ விஷ்ணுஇ சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.

 


முதல்நாள்  - வெண்பொங்கல்


நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் பொட்டுக் கோலமிடவேண்டும். இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.
இரண்டு வயது குழந்தையை அம்பிகையாக  பாவித்து குமாரியாக பூஜித்தால் வேண்டும். இன்று அம்பிகையை வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை அருளும்.
அம்பிகைக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து, 

எதிரிஇ கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும்.