You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அனைத்து மதங்களிலும் அத்திக்கு இத்தனைச் சிறப்பு ஏன் !

2019-11-03


சில மரங்களின் சில பாகங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் அத்தி மரம் முழுவதுமாக பல ஆயிரம் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.  உலகில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரே மரம் அத்திமரம் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதே போன்று அத்தி பழம் மருத்துவ குணம் நிறைந்தது.  புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மில்லி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், விட்டமின் ஏ, தயாமின் 0.10 மில்லி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளது.


இயற்கையை பேணும் அத்தி


இன்று காணப்படும் நீர் பற்றாகுறை காற்று மாசு அகிய பிரச்சினைகளுக்கான தீர்வை  நமது முன்னோர்கள் அன்றே கூறிச்சென்றுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று மர நடுகை, அதிலும் அத்திமரம் சூழல் நலனில் பெரும் பங்கு வகிக்கின்றது. 
அத்தி மரங்கள் மழை நீரை ஈர்க்கும் தன்மை உடையது. ஒரு வருடத்தில் 5 அல்லது 6 முறை காய்கக் கூடிய ஒரே மரமாக அத்தி மரங்கள் இருக்கின்றன.


இந்த உலகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அழிவைத் தடுக்க வேண்டுமெனில் அத்தி மரங்களை நடுதல் வேண்டும். 


இதனால் தான் அத்தி மரம் குறித்து அனைத்து மதங்களிலும் சிறப்பாகவும், பெருமையாக பேசப்பட்டிருக்கின்றது. 


ஒரு ஊரில் பத்து அத்தி மரங்கள் இருந்தால் அந்த ஊருக்கு நோய் ஏற்படாது. அதே போல் ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கு பசி, பட்டினி, தாகம் என்ற பேச்சே இருக்காது. அனைத்து உயிர்களும் இயற்கையும் செழிப்பாக இருக்கும்.


இந்து மதத்தில் அத்திமரம்


 சிலை, சுதை, தாரு என மூன்று வகை சுவாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அப்படி தாரு எனும் மரத்திலான சிலையை செய்ய வேண்டுமெனில் அது அத்தி மரத்தினால் செய்யப்பட வேண்டும் என இந்து ஆகம விதிகள் கூறுகின்றன.


அத்தி மரங்கள் உறுதித் தன்மையுடன் இருப்பதால், அதை வைத்து சிலை செய்யும் பழக்கம் நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர்.


முன்பு சிலை மட்டுமல்லாமல், சுவாமிக்கு தேவையான சில பொருட்களை தயார் செய்யவும் இந்த அத்தி மரங்கள் பயன்பட்டன.
அதன் அடிப்படையில் அத்தி வரதர் அத்தி மரத்தினால் செய்யப்பட்டிருந்தார்.