You are here : general

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்றைய நாள்!

2019-02-11


 ஆன்மீகம்

பரிகாரம் : தயிர் 
* சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
* பொது : சஷ்டி விரதம், முருகன் வழிபாடு 

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-


* 1809 -ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார். 1814 - நார்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது. 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது. 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது. 1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது. 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது. 1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது. 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது. 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது. 1964 - சீனக் குடியரசு (தைவான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது. 1968 - இஸ்ரேல்- ஜோர்டான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது. 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன. 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது. 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது. 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார். 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது. 2005 - ஜெர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது. 2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

 

1847 – தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
1917 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
1924 – வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989)
1964 – சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்

இறப்புகள்

1650 – ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (பி. 1596)
1693 – ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)
1713 – ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)
1946 – மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
1948 – செர்கீ ஐசென்ஸ்டைன், ரஷ்யத் திரைப்பட இயக்குனர் (பி. 1898)
1973 – ஹான்ஸ் ஜென்சன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1907)
19?? – சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி
1978 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
1979 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1912)
1991 – ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)
2006 – பெக்கி கிரிப்ஸ் அப்பையா, எழுத்தாளர் (பி. 1921)
2007 – சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975)

சிறப்பு நாள்

ஜப்பான் – நிறுவன நாள்
ஈரான் – இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
கமரூன் – இளைஞர் நாள
ஐக்கிய அமெரிக்கா – கண்டுபிடிப்பாளர் நாள்
பொஸ்னியா – விடுதலை நாள்
வத்திக்கான் நகரம் – விடுதலை நாள் (1922)