You are here : kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

April 11.2018


பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1004-ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார்.

மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. காலப்போக்கில் நின்றுபோயிருந்த இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் பெரியகோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் என்று 18 நாட்கள் விழாவாக நடத்தினர். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் 15-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது.

காலப்போக்கில் தேர் சிதிலமடைந்த நிலையில் 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. புதிதாக தேர் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா நாளை(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்படுகிறது. மாலை பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமிபுறப்பாடு நடைபெறுகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.

அங்கு தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேர் தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் வலம் வரும். 4 ராஜவீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. 29-ந் தேதி மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.