You are here : kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




காந்திக்கு ஒரு கோவில்

July,10,2018


இந்தியாவில் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தில் மகாத்மா காந்திக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தப்படுகிறது. 

தெலுங்கானா மாவட்டம் நாள்கொண்டா மாவட்டத்தில் உள்ள சித்யால் என்ற கிராமத்தில் காந்திக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமம் சிறிய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. 

மகாத்மா காந்தி கோவில் என்று பெயரிடப்பட்ட இந்த கோயிலில் காந்தி அமர்ந்திருக்கும் நிலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

 காந்தியை கடவுளாகக் கருதி வழிபடும் தலமாக இந்தக் கோவில் உள்ளது. கட்டமைப்பில்இந்து கோவிலைப் போல இருந்தாலும் மும்மதங்களின் வாசகங்கள் கோவிலில் எழுதப்பட்டுள்ளன.

இந்துக் கோவில்களில் இருப்பது போன்ற உண்டியல் இல்லாதபோதும், பூசைக்காக நிதி வசூலிக்கப்படுகிறது. இரண்டு தளங்களாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் தியான அறையும் அதில் காந்தியின் சிலை ஒன்றும் உள்ளது. 

முதல் தளத்தில் காந்தியின் போதனைகள் போதிக்கப்படுகின்றன. இங்கும் ஒரு காந்தி சிலை உள்ளது. காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பேர் காந்தி சிலைக்கு தினமும் பூசை செய்து வருகிறார்கள். காந்தியின் பிறந்த நாளான ஒக்டோபர் 2ஆ ம் திகதி சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.